பிளாட்டான பிட்ச்சில் தடுமாறும் அவரை டி20 உ.கோ அணியில் சேர்த்து தப்பு பண்ணீட்டிங்க – சஞ்சய் மஞ்ரேக்கர் கவலை

Sanjay
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை நிமிர நாக்பூரில் நடைபெறும் 2வது போட்டியில் வெற்றி பெற போராட உள்ளது. முன்னதாக மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியதால் தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக இருந்த இந்திய பவுலர்கள் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக காயத்திலிருந்து திரும்பிய ஹர்ஷல் படேல் 4 ஓவர்களில் அரை சதத்தை தவறவிட்டு 49 ரன்களை வாரி வழங்கியது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

Mathew Wade

அதிலும் 18வது ஓவரில் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்ட போது பந்து வீசிய அவர் 22 ரன்களை வாரி வழங்கி வெற்றியை எதிரணிக்கு பரிசளித்தார். அதைப்பார்த்த ரசிகர்கள் இவர் இல்லாமல் போனதால் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்றோம் என்று நினைத்துக் கொண்டிருந்ததை நினைத்து தற்போது வருத்தமடைகிறார்கள். மேலும் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் 3வது வேகப்பந்து வீச்சாளராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதை நினைத்து கவலையடையும் ரசிகர்கள் நிச்சயமாக இவரை போன்றவரை வைத்துக்கொண்டு இந்தியாவால் உலக கோப்பையை வெல்ல முடியாது என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -

சொதப்பல் ஹர்ஷல்:
ஏனெனில் காயமடைவதற்கு முன்பிருந்தே சுமாராக பந்து வீசி வரும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்களை (28*) கொடுத்த இந்திய பவுலர், அதிக முறை 40க்கும் மேற்பட்ட ரன்களை வழங்கிய இந்திய பவுலர் (5*) என்ற 2 மோசமான சாதனைகளை மொஹாலி போட்டியின் முடிவில் படைத்தார். மேலும் ஆஸ்திரேலியா போன்ற வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய ஆடுகளங்களில் 140+ வேகத்தில் பந்து வீசினால் தான் எதிரணி பேட்ஸ்மேன்களை ஓரளவு சமாளித்து தாக்குபிடிக்க முடியும்.

harshal

ஆனால் மித வேகப்பந்து வீச்சாளரான இவர் பெரும்பாலும் 120 – 130 கி.மீ வேகத்தில் வீசுபவராக உள்ளது மிகப் பெரிய ரசிகர்களுக்கு கவலையாக மாறியுள்ளது. மேலும் பந்து வீச்சுக்கு கை கொடுக்கக்கூடிய மைதானங்களில் அசத்தக்கூடிய இவர் பிளாட்டான வேகம், பவுன்ஸ் போன்ற அம்சங்களுக்கு கை கொடுக்கக்கூடிய மைதானங்களில் திணறுபவராக உள்ளார். எடுத்துக்காட்டாக மொகாலியில் நடைபெற்ற போட்டியின் பிட்ச் பிளாட்டாக இருந்ததாலேயே இரு அணிகளும் 200 ரன்களை அடித்தன, அதில் ஹர்ஷல் படேல் தடுமாறினார்.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட அனைத்து மைதானங்களுமே வேகம், பவுன்ஸ் போன்ற அம்சங்களுக்கு கைகொடுக்கும் பிளாட்டான பிட்ச்களைக் கொண்டிருக்கும் என்பதால் அங்கு நடைபெறும் உலகக்கோப்பையில் இவரை விளையாட தேர்வு செய்துள்ளது மிகப்பெரிய கவலையளிப்பதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்ஷல் படேலை கடந்த சில வருடங்களாக நாம் பார்த்து வருகிறோம். அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதை பார்த்து வருகிறோம். இருப்பினும் அவர் மைதானத்தை அடிப்படையாகக் கொண்ட பவுலர்”

Sanjay

“குறிப்பாக பிட்ச் காய்ந்திருக்கும் போது அவருடைய பலமான குறைந்த வேக (ஸ்லோ) பந்துகளை அடித்து விளையாடுவது கடினமாகும். அதிலும் மொகாலி போட்டியில் அவருடைய பந்துகள் வெறும் 120+ கி.மீ வேகத்தில் இருந்தது. எனவே அவருடைய வேகத்தில் மிகப்பெரிய பின்னடைவு உள்ளது. அதனால் வேகம், பவுன்ஸ் ஆகிய அம்சங்களுடன் பிட்ச் பிளாட்டாக இருக்கும் பட்சத்தில் ஹர்ஷல் படேல் மிகவும் கவலையை கொடுக்கக்கூடிய பவுலர். ஆனால் அது போன்ற பிட்ச்கள் தான் ஆஸ்திரேலியாவில் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

எனவே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் அவருடைய நுணுக்கங்களை இந்தியா மனதில் வைத்து செயல்பட வேண்டும்” என்று கூறினார். அதாவது பெரும்பாலும் 120 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய ஹர்ஷல் படேல் ஆஸ்திரேலியா ஆடுகளங்களுக்கு பொருந்த மாட்டார் என தெரிந்தும் இந்திய அணி நிர்வாகம் அவரை தேர்வு செய்துள்ளதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : மழை காரணமாக 2 ஆவது டி20 போட்டியில் ஏற்படவுள்ள மாற்றம் – ரிப்போர்ட் இதோ

அதை விட இவரைப் போலவே மற்றொரு சீனியர் பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரும் 120 – 130+ கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர் என்பதால் பும்ராவை தவிர இந்தியாவின் 3இல் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் உலக கோப்பையில் திணறப் போவதை நினைக்கும் இந்திய ரசிகர்களுக்கு இப்போதே வயிற்றில் புளியைக் கரைக்கிறது என்று கூறலாம்.

Advertisement