- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அழிந்து கொண்டிருந்த அந்த விளையாட்டுக்கு உயிர் கொடுத்ததே சேவாக் தான் – விவியன் ரிச்சர்ட்ஸ் புகழாரம்

கிரிக்கெட் வரலாற்றில் அதிரடியான பேட்டிங்கிற்கும், ஆக்ரோஷமான விளையாட்டிற்கும் பெயர் போனவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ். அவரது காலத்தில் 121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் 50 ரன்கள் சராசரியுடன் 24 சதங்கள் மற்றும் 45 அரைசதங்கள் என 8,540 குவித்து அசத்தியுள்ளார். அதேபோன்று ஒருநாள் போட்டிகளிலும் அவருடைய அதிரடியான ஆட்டம் இன்றளவும் ம் பேசப்பட்டு வரும் ஒரு விடயமாக இருந்து வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றியதே சேவாக் தான் : விவ் ரிச்சர்ட்ஸ்

அந்த காலத்து கிரிக்கெட் வீரர்கள் முதல் தற்போதைய இளம் வீரர்கள் வரை அனைவருக்கும் முன்னோடியாக இருக்கும் விவியன் ரிச்சர்ட்ஸ் தனக்கு இணையாக டெஸ்ட் போட்டிகளை சுவாரசியமாக மாற்றி அந்த வடிவ போட்டிகளை காப்பாற்றியதே இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் என்று தனது கருத்தினை கூறி சேவாக்கை புகழ்ந்து பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : வீரேந்திர சேவாக் எனக்கு இணையான வீரர். அழிந்து கொண்டிருந்த டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பித்து மீண்டும் கொண்டு வந்தவர் சேவாக் தான் என்று குறிப்பிட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர்களான லாரா மற்றும் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியை நேரில் காண வந்துள்ளனர்.

இவ்வேளையில் இந்த கருத்தினை அவர் தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த வேளையில் தற்போது இரண்டாவது போட்டியிலும் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது.

- Advertisement -

விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியது போலவே டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்னாள் இந்திய வீரரான வீரேந்திர சேவாக் இந்திய அணிக்காக மட்டும் 104 டெஸ்ட் போட்டியில் விளையாடி 49.3 சராசரி உடனும் 23 சதங்கள் மற்றும் 32 அரைசதங்கள் என 8,586 ரன்களை குவித்து பிரமாதப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளில் முதல் சர்வதேச வீராங்கனையாக ஸ்மிரிதி மந்தனா நிகழ்த்திய – வரலாற்று சாதனை

அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களை அடித்த முதல் இந்திய வீரராகவும், 2 முச்சதங்களை அடித்த வீரராகவும் திகழ்ந்து வருகிறார். அதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் 278 பந்துகளிலேயே 300 ரன்களை அடித்து அதிவேகமாக முச்சதம் அடித்த வீரராகவும் சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -