நான் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போதே என் உயிர் போயிருந்தாலும் சந்தோஷமாக சென்றிருப்பேன் – வெஸ்ட் இண்டீஸ் வீரர் அதிரடி

viv
- Advertisement -

அனைத்து கால சர்வதேச கிரிக்கெட்டில் விரல் விட்டு எண்ணக் கூடிய மிகச் சிறந்த வீரர்கள் உள்ளனர். சச்சின் டெண்டுல்கர், டான் பிராட்மேன், ராகுல் டிராவிட், மகேந்திரசிங் தோனி, விராட் கோலி ஆகியோர் வரிசையில் இவரும் இடம் பிடிப்பார். அவர்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ். கிரிக்கெட் வரலாற்றில் இவரது பெயர் தற்போதுவரை கிரேட் ரிசர்ச்சர்ட் என்றே உள்ளது. தற்போது வரை உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் தற்போதும் இடம்பிடித்து வருகிறார்.

viv richards

- Advertisement -

இவரது சிறப்பு வேகப்பந்து வீச்சாளர்களை எளிதாக அடித்து ஆடுவது ஆகும். மேலும் அவரது காலகட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் அந்த பந்து வீச்சாளர்களை அடித்து ஆடியிருக்கிறார்.
பலரும் இவருக்கு ஹெல்மெட் அணியும் படி ஆறிவுறுத்தியு கூட அதனை அணியாமலேயே வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்து இருக்கிறார் சமீபத்தில் ஏன் ஹெல்மெட் அணியாமல் ஆடினேன் என்பது குறித்து பேசியுள்ளார். அவர் இதுகுறித்து அவர் கூறியதாவது :

நான் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த நான் நான் மிகவும் விரும்பும் பேட்டிங்கை பிடித்துக் கொண்டிருக்கும் போதே இறந்தால் கூட பரவாயில்லை என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அப்படி நான் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்த போதே இறந்து இருந்தால் அதனை விட வேறு பாக்கியம் எதுவும் இல்லை.

மற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளை பார்த்திருக்கிறேன். அவர்கள் மிக மிக அர்ப்பணிப்பை கொண்டு களம் இறங்குவார்கள். ஒரு கார் ரேஸில் களமிறங்கும் வீரருக்கு இருக்கும் ஆபத்தை விட பெரிய ஆபத்து வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார் விவியன் ரிச்சர்ட்ஸ்.

- Advertisement -

தற்போது 68 வயது நிரம்பியிருக்க சர்வதேச அளவில் 121 போட்டிகள் மற்றும் 187 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 8230 ரன்களும் ஒருநாள் போட்டியில் 6271 ரன்கள் குவித்துள்ளார் டெஸ்ட் போட்டியில் 292, ஒருநாள் போட்டியில் 189 ரன்னும் இவரது அதிகபட்ச ரன் ஆகும்.

richards

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஈடுஇணையற்ற வீரரான இவரை பின்பற்றி தற்போதும் அந்த அணி வீரர்கள் ஆடிவருகின்றனர். அவரது பெயரில் சில தொடர்களும் நடைபெற்றிருக்கின்றன. இந்நிலையில் அவரின் இந்த பேட்டி தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement