கோலியை போன்று ஒருநாளாவது ஆடியிருக்க வேண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பேட்டி

Richards
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகிய இரண்டையும் இந்திய அணி அபாரமாக கைப்பற்றியது.

viv richards

- Advertisement -

இதனை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் துவங்க உள்ளது. இந்த தொடரின் முன்னதாக விராட் கோலி மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் ஒரு நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள போவதாகவும் அதனை பிசிசிஐ டிவியில் ஒளிபரப்ப இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாளை அந்த சிறப்பு நேர்காணல் ஒளிபரப்பப்பட உள்ளது. இதில் ஆன்டிகுவா வின் கிங் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் இந்தியாவின் கிங் கோலி ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளனர். இதனை முழுவதுமாக காண பிசிசிஐ டிவி காணுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே விவியன் ரிச்சர்ட்ஸ் விராட் கோலி குறித்து ஒருநாள் தொடரிலும் வர்ணணை செய்யும் போது : என்ன ஒரு வீரர் என்ன ஒரு சிறப்பான ஆட்டம் நான் விளையாடும் போது இவரை போன்ற ஒரு நாள் விளையாடி இருந்தாலும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று பாராட்டு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement