ஐபிஎல்-லை நான் தான் காப்பாற்றி இருக்கேன்…மார்தட்டும் இந்திய அதிரடி வீரர் ! – காரணம் இதுதான் ?

chris
- Advertisement -

ஐ பி எல் போட்டிகளில் பல ஆட்டக்காரர்கள் சென்ற ஆண்டு ஆடிய அதே அணியில் ஆடினாலும் ஒரு சில ஆட்டக்காரர்கள் வேறு சில அணிகளுக்கு சென்று விட்டனர். அதிலும் இந்த ஆண்டின் ஐ பி எல் ஏலத்தின் போது பல வீரர்கள் கோடி கணக்கில் ஏலம் போனாலும் பல பி எல் சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஜெயில் மட்டும் ஏலம் போகாமல் இருந்து பின்னர் பஞ்சாப் அணியில் ஏலம் எடுக்க பட்டார்.

sehwag

- Advertisement -

இதில் மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால் கெயில் மட்டும் இரண்டு சுற்றிலும் ஏலம் போகவில்லை அதனால் அவரின் அடிப்படை ஏல தொகையான 2கோடிக்கு அவரது ஏலத்தொகை நிர்ணயிக்க பட்டது. அப்போதும் அவர் ஏலம் போகாததால் பஞ்சாப் அணியின் ஆலோசகரான இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் கெய்லை ஏலம் எடுக்க பஞ்சாப் அணியின் ஓனர் ப்ரீத்தி பரிந்துரை செய்து பின்னர் அவர் பஞ்சாப் அணியில் ஏலம் எடுக்கபட்டார்.

இந்நிலையில் கெய்லை தாம் ஏலம் எடுத்து ஐ பி எல் தொடரை தான் காப்பற்றி விட்டதாக சேவாக் கூறியுள்ளார்.அதற்கு காரணம் சென்னைக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்து அசத்தியது மேலும் சமீபத்தில் நடந்த ஹைட்ரபாத்திற்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தியது போன்ற ஆட்டங்களில் கெய்ல் தனது அதிரடியை வெளிப்படுத்தினார்.

gayle

இதானல் பல அணிகளும் ஓரு சிறந்த அட்டக் காரரை மிஸ் செய்து விட்டோமே என்று வருந்தினார். இந்நிலையில் கெயிலின் அதிரடி ஆட்டத்தை பற்றி ட்வீட் செய்த சேவாக் கெய்லை ஏலம் எடுத்து தான் ஐ. பி. எல் தொடரை காப்பாற்றி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கு கெயிலும் ஆம் உண்மை தான் என்று ரீ ட்வீட் செய்துள்ளார்.

Advertisement