2025 ஐ.பி.எல் தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வுசெய்து அறிவித்த வீரேந்திர சேவாக் – லிஸ்ட் இதோ

Sehwag
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று நடைபெற்ற இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. பின்னர் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் :

2025 ஐ.பி.எல் தொடரின் பெஸ்ட் பிளேயிங் லெவனை அறிவித்த சேவாக் :

பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. பெங்களூரு அணி பெற்ற இந்த வெற்றிக்கு பலரது மத்தியிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருவதோடு அந்த அணியின் நீண்ட கால ஏக்கமும் நிறைவுக்கு வந்துள்ளது. அதேவேளையில் மீண்டும் ஒருமுறை கோப்பையை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது வருத்தத்தில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நடைபெற்று முடிந்த இந்த 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது சிறந்த பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் இந்த 2025 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து தனது பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறார்.

அந்த வகையில் சேவாக் தேர்வு செய்துள்ள அந்த அணியில் துவக்க வீரர்களாக குஜராத் அணியை சேர்ந்த சாய் சுதர்சனையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த விராட் கோலியையும் அவர் தேர்வு செய்துள்ளார். அவர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் லக்னோ அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரானை தேர்வுசெய்துள்ள அவர் நான்காவது இடத்தில் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

ஐந்தாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான சூரியகுமார் யாதவையும், ஆறாவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹென்றிச் கிளாசனையும் தேர்வு செய்துள்ளார். இதைதவிர்த்து மீதமுள்ள ஐந்து இடங்களுக்கு இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக நூர் அகமது மற்றும் குல்தீப் யாதவையும், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜோஷ் ஹேசல்வுட், பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

மேலும் கூடுதலாக இம்பேக்ட் பிளேயராக ஜித்தேஷ் சர்மாவையும் அவர் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விரேந்திர சேவாக் தேர்வு செய்துள்ள 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் பெஸ்ட் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 2012இல் என் பணத்தை வெஸ்ட் இண்டீஸில் கொள்ளையடிச்சாங்க.. ரோஹித் சொல்லியும் கேட்கல.. புஜாரா பேட்டி

1) சாய் சுதர்சன், 2) விராட் கோலி, 3) நிக்கோலஸ் பூரான், 4) ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), 5) சூரியகுமார் யாதவ், 6) ஹென்றிச் கிளாசன், 7) ஜோஷ் ஹேசல்வுட், 8) பிரசித் கிருஷ்ணா, 9) நூர் அகமது, 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) குல்தீப் யாதவ் (இம்பேக்ட் வீரர் : ஜிதேஷ் சர்மா)

Advertisement