கேதார் ஜாதவை அணியில் இருந்து நீக்கி இருக்க கூடாது. அவர் சாதாரண வீரர் இல்லை – ஆதரவளித்த வீரர்

Jadhav-2
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த அணியில் அனைத்தும் சரியாக இருந்தும் மிடில் ஆர்டர் பேட்டிங் மோசமாக இருப்பதால் 7 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டது. இந்த தோல்விகளின் காரணமாக இந்தாண்டு பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு சற்று மங்கி உள்ளது என்றே கூறலாம்.

CSK-1

இதன் காரணமாக எப்போதும் இல்லாத வகையில் புள்ளிப் பட்டியலில் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இந்த தோல்விகள் தான் காரணம் என்று ஒரு சில வீரர்கள் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கேதர் ஜாதவ் சரியாக ஆடுவதில்லை என்ற ஒரு விமர்சனம் இருந்துகொண்டே இருக்கிறது.

- Advertisement -

இருந்தாலும் தோனி அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரைத் தொடர்ந்து ஆடும் லெவனில் விளையாட வைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார் அவர் கூறுகையில்… கேதர் ஜாதவ் இந்திய அணிக்காக விளையாடிய ஒரு வீரர் தற்போதும் இந்திய அணியில் விளையாடி கொண்டிருக்கிறார்.

Jadhav 1

இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் நன்றாக ஆடவில்லை என்பதற்காக அவரை சென்னை அணியில் இருந்து நீக்கி விடக்கூடாது. தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

Jadhav

தோனி அவருக்கு ஆதரவாக இருந்து உத்வேகம் கொடுக்க வேண்டும் சிறப்பாக விளையாடி விட்டால் இந்திய அணிக்கு ஆடும் போது அவர் நம்பிக்கையுடன் இருப்பார் என்று தெரிவித்திருக்கிறார் விரேந்தர் சேவாக்.

Advertisement