- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நீங்க தான் டி20 உ.கோ வரலாற்றின் கிரேட் பேட்ஸ்மேன்.. ஓய்வு பெற்ற விராட், ரோஹித்தை வாழ்த்திய சேவாக்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. இத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையையும் 13 வருடங்கள் கழித்து ஒரு ஐசிசி உலகக் கோப்பையையும் வென்று இந்தியா சாதனை படைத்தது.

இந்த வெற்றியுடன் இந்தியாவின் நம்பிக்கை நாயகர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். கடந்த பல வருடங்களாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர்கள் வருங்காலத்தை கருத்தில் கொண்டு விடைபெறுவதாக அறிவித்துள்ளது சில ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

சேவாக் வாழ்த்து:
இந்நிலையில் ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஜாம்பவான் வீரேந்திர சேவாக் தனித்தனியே பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக விராட் கோலி தான் டி20 உலகக் கோப்பை வரலாற்றின் மகத்தான பேட்ஸ்மேன் என்று சேவாக் பாராட்டியுள்ளது பின்வருமாறு. “விராட் கோலியை பற்றி என்ன சொல்வது. அவர் தான் டி20 உலகக் கோப்பையின் சிறந்த பேட்ஸ்மேன்”

“2014, 2016 உலகக் கோப்பைகளில் அவர் தான் கடினமான சூழ்நிலைகளில் வெற்றி பெற வைத்து இந்தியாவை தனியாளாக கொண்டு சென்றார். 2022ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் அவர் (பாகிஸ்தானுக்கு எதிராக) எங்களுடைய டி20 வரலாற்றை எழுதினார். ஃபைனலில் மீண்டும் அவர் தன்னுடைய கிளாஸை காண்பித்தார். இதுவரை எடுத்த ரன்களை காட்டிலும் தன்னை விட அணியே பெரியது என்று அவர் சொல்லும் அணுகுமுறை சுவாரசியமாக இருந்தது. இது ஒரு குருவின் கருணை என்று நான் நம்புகிறேன்”

- Advertisement -

“அவருடைய நட்சத்திர டி20 கேரியர் முடிவுக்கு வருகிறது. இன்னும் 2 வகையான ஃபார்மட்டில் உயர்தரத்தை நிலைநிறுத்த அவருக்கு அருள் இருக்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” எனக் கூறினார். அதே போல கேப்டன் ரோஹித் சர்மா பற்றி சேவாக் பாராட்டியுள்ளது பின்வருமாறு. “ரோஹித் மட்டுமே இதுவரை நடந்த 9 டி20 உலகக் கோப்பைகளிலும் விளையாடிய ஒரே வீரர்”

இதையும் படிங்க: ஃபைனலில் 34/3 என இந்தியா சரிந்ததும் அவர் தான் என்னை பேட்டிங்ல ப்ரோமோட் பண்ணாரு.. அக்சர் படேல் பேட்டி

“கடந்த ஒரு வருடத்தில் தன்னுடைய ஆட்டத்தை அடித்து நொறுக்கக்கூடியதாக மாற்றிய அவர் அதை அணியிலும் கொண்டு வந்தது மிகவும் கவரக்கூடியதாக இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் அவர் அற்புதமான முடிவைக் கொண்டு வந்துள்ளார். நீங்கள் உங்களை எப்படி வைத்திருந்தீர்கள் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். வருங்காலங்களில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -