தோனியை கலாய்த்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய சேவாக்..! – வியப்பில் தோனி..! என்னனு தெரியுமா..?

shewag
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனது 37-வது பிறந்தநாளை இன்று (ஜூலை 7 ) கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
shewagtea
இங்கிலாந்து அணிவுடனான தொடரில் விளையாட தற்போது தோனி இங்கிலாந்து மண்ணில் இருக்கிறார். இதனால் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாட இங்கிலாந்து சென்றார் சாக்ஷி. நேற்று நள்ளிரவு கேக் வெட்டி தோனி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சாக்ஷி.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீர்ர் சேவாக் ட்விட்டர் பக்கத்தில் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில் தோனி ஸ்டம்பிங் ஆகாமல் இருக்க காலை விரித்து கிரீஸில் கால்பதிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு .அதில்”இந்த ஸ்ட்ரெட்ச்சை விட இன்னும் நீளமாக உங்கள் வாழ்வில் சந்தோசத்தை, உங்கள் ஸ்டாம்பிங் வேகத்தை விட விரைவாக பெற வேண்டும். என்று வாழ்த்துகிறேன். ஓம் பிணிஷாய நமஹ!” என்று வேடிக்கையாக பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துளளார்.


அதே போல இந்த பதிவில் தோனியின் பிட்னெஸ், அவரின் அதிவேக ஸ்டம்பிங், மற்றும் அவரின் பினிஷிங் திறமை ஆகிய மூன்றினையும் மிகவும் அற்புதமாக குறிப்பிட்டு தோனிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார் சேவாக். தற்போது ஷேவாகின் இந்த பதிவு ட்விட்டர் வாசிகளால் பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது.

- Advertisement -
Advertisement