10 ஃபைனலுக்கு சென்ற சிஎஸ்கே.. இம்முறை 10வது இடத்தை பிடிச்சா தான் அதை மாத்துவங்க.. சேவாக் பேட்டி

Virender Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறுவதற்கு தயாராகியுள்ளது. ஏனெனில் இந்த வருடம் ஆரம்பம் முதலே தடுமாறும் அந்த அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 9 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள சென்னை 7 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் திண்டாடுகிறது.

2008 முதல் 10 இறுதிப் போட்டிகளில் விளையாடி 5 கோப்பைகளை வென்ற சென்னை தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெறுவதற்கு பெயர் போன அணியாகும். ஆனால் இந்த வருடம் மோசமான பேட்டிங் காரணமாக அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ள சென்னை 2020, 2022, 2024க்குப்பின் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேற உள்ளது. முன்னதாக இந்த வருடம் சென்னை அணி தொடர் தோல்விகளால் நிறைய மோசமான சாதனைகளைப் படைத்தது.

- Advertisement -

கடைசி இடம்:

அதே சமயம் ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறை கூட சென்னை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்ததில்லை என்ற கவுரவ சாதனையை வைத்துள்ளது. ஆனால் அந்த கௌரவமிக்க சாதனையையும் இம்முறை சிஎஸ்கே பறிகொடுக்கும் அபாயம் எடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை 10வது இடத்தைப் பிடித்தால் தான் தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த வருடம் அசத்துவார்கள் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் க்ரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “சென்னை 10வது இடத்தை பிடிக்குமா இல்லையா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் பத்தாவது இடத்தைப் பிடித்தால் அது இனிப்பாக இருக்கும். ஏனெனில் அப்போது தான் கடைசி இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தோம்? என்பதை அவர்கள் உணர்வார்கள். வரலாற்றில் நிறைய இறுதிப் போட்டிகளில் விளையாடிய அவர்கள் இது போன்றவற்றை அனுபவித்ததில்லை” என்று கூறினார்.

- Advertisement -

18இல் 10 ஃபைனல்:

அதே நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் வீரர் ரோகன் கவாஸ்கர் வரலாற்றில் 10 இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி தங்களது சிந்தனைகளை மாற்ற வேண்டியதில்லை. மாறாக அணியை மட்டுமே சரியாக கட்டமைக்க வேண்டும் என்று கூறினார். இது பற்றிய அவர் பேசியது பின்வருமாறு. “சிஎஸ்கே 10வது இடத்தை பிடித்தால் அது ஏமாற்றமாக இருக்கும். அந்த ஏமாற்றம் அவர்கள் அடுத்த வருடம் சிறப்பாக மீண்டு வர உதவும்”

இதையும் படிங்க: 400 ஆவது போட்டியிலும் தொடர்ந்த எம்.எஸ் தோனியின் சோகம்.. அவருக்கும் 100க்கும் ராசியில்ல – விவரம் இதோ

“என்னைப் பொறுத்த வரை சென்னை 7 – 8வது இடத்தைப் பிடிப்பதை விட பத்தாவது இடத்தைப் பிடிப்பது சிறந்தது. அப்போது தான் அடுத்த வருடம் ஏதேனும் பெரிய மாற்றத்தைச் செய்வார்கள். அதே சமயம் தற்போதைய சிந்தனைகளால் அவர்கள் 18 வருடங்களில் 10 ஃபைனல்களில் விளையாடியுள்ளனர். எனவே சிந்தனையில் மாற்றம் தேவையில்லை” எனக் கூறினார்.

Advertisement