IPL 2023 : இதுக்கு தான் வந்திங்களா? ஒரு மேட்ச்ல அடிச்சுட்டா மட்டும் போதாது – ஹைதராபாத் வீரரை விளாசிய சேவாக்

Sehwag
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2016க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தங்களுடைய முதல் 9 போட்டிகளின் முடிவில் 6 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி கடைசி இடத்தை பிடித்தது. அந்த அணியின் இந்த தோல்விகளுக்கு பேட்டிங் துறையில் முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியது காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக 13.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட இளம் இங்கிலாந்து வீரர் ஹரி ப்ரூக் மோசமாக செயல்பட்டு தோல்விக்கு காரணமாகும் வகையில் அமைந்தார்.

Harry Brook

- Advertisement -

கடந்த 2022 அண்டர்-19 உலக கோப்பையில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடிப்படையாக மாறியுள்ள இங்கிலாந்து அணியில் அசத்தினார். குறிப்பாக பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றிய அவர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2023 பிஎஸ்எல் தொடரிலும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அப்படி இந்த வயதிலேயே டெஸ்ட் மற்றும் டி20 என வெவ்வேறு வகையான கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்படுவதால் இந்தியாவின் விராட் கோலியை போல வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அவர் உருவெடுப்பார் என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாராட்டினார்.

சேவாக் விளாசல்:
அதனால் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே 13 (21), 3 (4), 13 (14) என 100க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் சொற்ப ரன்களில் அவுட்டாகி சுமாராக செயல்பட்டார். அதனால் பொதுவாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் சொதப்பினாலே விட்டு வைக்காத இந்திய ரசிகர்கள் “எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக செயல்படுவதற்கு இது ஒன்றும் தார் ரோட் பிட்ச்களை கொண்ட பாகிஸ்தான் கிடையாது” என்று அவரை கலாய்த்தனர்.

Harry-Brook

அந்த நிலையில் கொல்கத்தாவுக்கு எதிராக பேட்டிங்கு சாதகமான ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் சதமடித்து 100 (55) ரன்களை விளாசி ஹைதராபாத்தை வெற்றி பெற வைத்த அவர் இந்திய ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்ததை நினைத்து மகிழ்ச்சியடைவதாக போட்டியின் முடிவில் வெளிப்படையாக பேசினார். ஆனால் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு விராட் கோலி போன்றவர்களே அமைதியாக இருக்கும் நிலையில் ஒரு போட்டியில் அடித்து விட்டு வாயில் பேசிய அவர் அதைத் தொடர்ந்து 9 (7), 18 (13), 7 (14), 0 (2), 0 (4) என அடுத்து களமிறங்கி போட்டிகளில் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் ஒரு போட்டியில் மட்டுமே அசத்துவார் என்று ரசிகர்கள் மீண்டும் ரசிகர்களில் கிண்டல்களுக்கு உள்ளான அவரை ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கழற்றி விட்ட ஹைதராபாத் நிர்வாகம் கிளன் பிலிப்ஸ்க்கு வாய்ப்பு கொடுத்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் காணப்படும் கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்கத் தான் கிரிக்கெட்டில் விளையாட வந்தீர்களா என்று அவரை வீரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Sehwag

மேலும் கடினமாக உழைத்து வாங்கிய சம்பளத்திற்கு சிறப்பாக விளையாடி செல்லாமல் ஒரு போட்டியில் மட்டும் அசத்தினால் போதுமா என்று அவரை விளாசும் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “கலாய்ப்பவர்களிடம் நீங்கள் ஏன் வாயை கொடுக்கிறீர்கள்? சொல்லப்போனால் யார் கலாய்க்கிறார்கள் யார் பாராட்டுகிறார்கள் என்பதை முதலில் நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? நீங்கள் இங்கே கடினமாக உழைத்து வேலை செய்து சிறப்பாக செயல்பட்டு செல்வதற்கு வந்துள்ளீர்கள்”

- Advertisement -

“ஒருவேளை நீங்கள் சமூக வலைதளத்தில் ஏதாவது பதிவிட விரும்பினால் அதை செய்யுங்கள். ஆனால் அதற்காக வரும் பதில்களை படிக்காதீர்கள். ஏனெனில் அது நிச்சயமாக உங்களுடைய மனதை தாக்கும். சொல்லப்போனால் சிறப்பாக விளையாட அவை அனைத்தையும் விட்டுவிட்டு நல்ல இசையை கேட்டு பிடித்த படங்களை பார்த்து நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பேசும் பழக்கங்களை நீங்கள் செய்ய வேண்டும்”

இதையும் படிங்க:IPL 2023 : ஐ.பி.எல் வரலாற்றில் இப்படி யாரும் ஆட்டநாயகன் விருது வாங்கியிருக்க மாட்டாங்க – சன் ரைசர்ஸ் வீரர் படைத்த சரித்திரம்

“சமூக வலைதளம் என்பது பார்ப்பதற்கல்ல உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்வதற்கான இடமாகும். அவர்களுக்கு பயப்பட வேண்டாம். நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் நாளை உங்களை கலாய்த்தவர்களே மனதார பாராட்டுவார்கள்” என்று கூறினார்.

Advertisement