IPL 2023 : ஐ.பி.எல் வரலாற்றில் இப்படி யாரும் ஆட்டநாயகன் விருது வாங்கியிருக்க மாட்டாங்க – சன் ரைசர்ஸ் வீரர் படைத்த சரித்திரம்

Glenn-Phillips
- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 52-வது ஐபிஎல் லீக் போட்டியானது ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் பரபரப்புக்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசஸ் அணியானது துவக்கத்தில் சிறிது பொறுமையாக ஆரம்பித்தாலும் மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தது.

Abdul Samad

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணி சார்பாக களமிறங்கிய அனைத்து வீரர்களுமே ஒரு வகையில் பங்களிப்பை வழங்க சன்ரைசர்ஸ் அணியானது 18 ஓவர்களில் முடிவில் 174 ரன்கள் எடுத்திருந்தது. இதன் காரணமாக கடைசி இரண்டு ஓவரில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவை என்கிற நிலையில் ராஜஸ்தான் அணியே இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19-வது ஓவரை எதிர்கொண்ட கிளென் பிலிப்ஸ் முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர் விளாச அதுமட்டுமின்றி நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து முதல் நான்கு பந்துகளிலேயே 22 ரன்கள் சேர்த்தார்.

பிறகு ஐந்தாவது பந்தில் தூக்கி அடிக்க ஆசைப்பட்ட அவர் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய மார்கோ யான்சன் இரண்டு ரன்களை அடிக்க 19-வது ஓவரில் மட்டும் சன் ரைசர்ஸ் அணிக்கு 24 ரன்கள் கிடைத்தது. இதன் காரணமாக போட்டியின் கடைசி 20-ஆவது ஓவரில் 17 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இருந்தது. அதனை எதிர்கொண்டு விளையாடிய அப்துல் சமத் முதல் மூன்று பந்துகளிலேயே 10 ரன்களை குவிக்க கடைசி மூன்று பந்துகளுக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்டது.

Glenn Phillips 1

ஆனால் நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் ஒரு சிங்கிள்ஸ் மட்டுமே கிடைக்க கடைசி பந்தில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் அப்துல் சமத் அடித்த பந்தை ஜாஸ் பட்லர் பிடித்தார். இதனால் போட்டி முடிந்ததாக பார்க்கப்பட்ட வேளையில் கடைசியில் அது நோபால் என்று தெரியவந்தது. அதன் பிறகு மீண்டும் வீசப்பட்ட பந்தில் சிக்ஸர் அடித்து அப்துல் சமத் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் இரு அணிகளுமே 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்க, ராஜஸ்தான் பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டிருக்க ஆட்டநாயகன் விருது மட்டும் சன் ரைசர்ஸ் அணியை சேர்ந்த கிளென் பிலிப்ஸ்க்கு வழங்கப்பட்டது. ஏழு பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 25 ரன்கள் குவித்து போட்டியின் முக்கியமான 19-வது ஓவரில் ஆட்டத்தை திருப்பியதாலே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : SRH vs RR : எல்லாமே ஒரு நொடில மாறிப்போச்சு. கடைசி பந்தில் கிடைத்த வெற்றி குறித்து – எய்டன் மார்க்ரம் பேட்டி

இதில் அவர் படைத்த சாதனை யாதெனில் : ஐபிஎல் வரலாற்றில் ஏழு பந்துகளை மட்டுமே சந்தித்து (அதாவது குறைந்த பந்துகளை மட்டுமே சந்தித்து) ஆட்டநாயகன் விருதினை பெற்ற பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் 9 பந்துகளை சந்தித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றிருந்த வேளையில் தற்போது அந்த சாதனையை கிளென் பிலிப்ஸ் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement