SRH vs RR : எல்லாமே ஒரு நொடில மாறிப்போச்சு. கடைசி பந்தில் கிடைத்த வெற்றி குறித்து – எய்டன் மார்க்ரம் பேட்டி

Markram
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52-வது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி கடைசி பந்துவரை ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்தது. ஏனெனில் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 215 ரன்கள் என்கிற கடினமான இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணியானது கடைசி பந்தில் சிக்ஸருடன் போட்டியை வெற்றிகரமாக முடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

SRH vs RR

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது துவக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டினை இழந்து வந்தது.

இதன் காரணமாக கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இதனால் நிச்சயம் ராஜஸ்தான அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 19-ஆவது ஓவரில் கிளென் பிலிப்ஸ் 3 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டர் என அதிரடி காட்டி ஆட்டம் இழந்து வெளியேறினார்.

Abdul Samad

அதன்பின்னர் கடைசி ஓவரில் அப்துல் சமத் மிகச் சிறப்பாக விளையாடியது மட்டுமின்றி கடைசி பந்தில் ஆட்டம் இழந்தும் அது நோபால் என்று அறிவிக்கப்பட இறுதியாக வீசப்பட்ட கடைசி பந்தில் மீண்டும் ஒரு சிக்சரை பறக்க விட்டு அந்த அணியை அசத்தலான வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற த்ரில் வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் :

- Advertisement -

ஒரு நொடியில் அனைத்துமே மாறியது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி. 215 ரன்கள் என்கிற இலக்கினை துரத்துவது எளிது கிடையாது. இதுபோன்ற மிகப்பெரிய டார்கெட்டை துரத்தும் போது அனைவரது பங்களிப்பும் அவசியம். அந்த வகையில் இன்று எங்களது பேட்ஸ்மேன்கள் அனைவருமே மிகச்சிறப்பான பங்களிப்பினை வழங்கினார்.

இதையும் படிங்க : RR vs SRH : அவர்மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேன். எல்லாம் வீணா போச்சி – தோல்விக்கு பிறகு சஞ்சு சாம்சன் வருத்தம்

குறிப்பாக அபிஷேக் சர்மா துவக்கத்தில் அதிரடியாக விளையாடினார். அதேபோன்று ராகுல் திரிப்பாதி அவருக்கு சரியான கம்பெனி கொடுக்க இறுதி நேரத்தில் கிளென் பிலிப்ஸ் மற்றும் கிளாசன் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்துல் சமத் எங்களுக்காக போட்டியை மிகச்சிறப்பாக முடித்துக் கொடுத்தார். இது போன்ற போட்டிகளில் ஏற்படும் அழுத்தங்களை சமாளித்து விளையாடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி எங்களுக்கு மேலும் நம்பிக்கை அளித்திருக்கிறது என மார்க்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement