ரன்கள் அடிக்காம கிச்சிடி சாப்பிட்டே 2011 உ.கோ ஜெயிச்சாரு – கேப்டன் தோனி பற்றி கலகலப்பான பின்னணியை பகிர்ந்த சேவாக்

sehwag 1
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுக்க முழுக்க இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி துவங்கும் நிலையில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் தமிழகத்தின் தலைநகர் சேப்பாக்கத்தில் வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. மேலும் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

worldcup

- Advertisement -

முன்னதாக 2011 உலக கோப்பையில் சச்சின், சேவாக், ஹர்பஜன், ஜாகிர் கான் போன்ற சீனியர்களையும் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற இளம் வீரர்களையும் கச்சிதமாக வழி நடத்திய எம்எஸ் தோனி மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். ஆனாலும் ஒரு பேட்ஸ்மேனாக அந்த தொடரில் ஆரம்பம் முதலே தடுமாறி வந்த அவர் அரையிறுதிக்கு முன்பு வரை ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாரான ஃபார்மில் தவித்து வந்தார்.

ராசியான கிச்சடி:
இருப்பினும் இலங்கைக்கு எதிரான மாபெரும் ஃபைனலில் சச்சின், சேவாக் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டான போது யுவராஜ் சிங்கிற்கு முன்பாக களமிறங்கி நங்கூரமாக நின்ற கௌதம் கம்பீருடன் சேர்ந்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த அவர் 91* ரன்கள் குவித்து 28 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். குறிப்பாக ரவி சாஸ்திரி வர்ணனையில் இப்போது நினைத்தாலும் புல்லரிக்க வைக்கும் சிக்சருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்த அவர் ஆட்டநாயகன் விருது வென்று கேப்டனுக்கு அடையாளமாகவே செயல்பட்டார்.

MS Dhoni 2011 World Cup SIx

இந்நிலையில் பொதுவாகவே “ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தால் நமது அணி வெல்லும்” என சச்சின் முதல் சாதாரண ரசிகர்கள் வரை இந்தியாவில் இருப்பவர்கள் கண்மூடித்தனமான அன்பு கலந்த அதிர்ஷ்டத்தை நம்புவது வழக்கமாகும். அந்த வரிசையில் 2011 உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் முதல் சில போட்டிகளில் இந்தியா வென்ற போது சாப்பிட்ட கிச்சடி உணவை கடைசி வரை கைவிடாமல் சாப்பிட்டே தோனி கோப்பையை வென்றதாக முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி உலகக்கோப்பை அட்டவணை வெளியீட்டு விழாவில் அவர் கலகலப்புடன் பேசியது பின்வருமாறு. “அந்தத் தொடரில் நாங்கள் விளையாடிய போதெல்லாம் அனைவரும் சொந்த மண்ணில் எந்த அணியும் கோப்பையை வென்றதில்லை என்று எங்களிடம் சொல்வார்கள். மேலும் அந்த உலகக் கோப்பையில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மூடநம்பிக்கையை கொண்டிருந்தோம். அந்த வரிசையில் எம்எஸ் தோனி அந்த தொடர் முழுவதும் கிச்சடி உணவை சாப்பிட்டு வந்தார். அதை ஏன் என்று கேட்டதற்கு நான் ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் கிச்சிடி சாப்பிடுவதால் நம்முடைய அணி தொடர்ந்து வெல்கிறது என்று அவர் எங்களிடம் கூறினார்” என தெரிவித்தார்.

worldcup2011

அத்துடன் இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் விளையாடிய கனவு பற்றி சேவாக் மேலும் பேசியது பின்வருமாறு. “8வது படிக்கும் போது 1992 உலகக்கோப்பை முதல் முறையாக நான் கிரிக்கெட் பார்க்க துவங்கினேன். அப்போது தான் சச்சினையும் நான் பார்த்தேன். அந்த சமயத்தில் ஒருவேளை உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றால் நானும் நம்முடைய நாட்டையும் பெருமையடைய வைப்பேன் என்று நான் நினைத்தேன்”

இதையும் படிங்க:வீடியோ : இப்டியா இருப்பிங்க? கவனக்குறைவால் பாதி வெற்றியை கோவையிடம் கோட்டை விட்ட சேலம் – நடந்தது என்ன?

“அந்த வகையில் நான் 3 உலகக் கோப்பை ஃபைனல்களில் விளையாடி ஒன்றில் தோற்று ஒன்றில் வென்றேன். மற்றொன்றில் லீக் சுற்றுடன் வெளியேறினோம். எனவே என்னுடைய உலகக்கோப்பை பயணம் மேடு பள்ளங்கள் நிறைந்தது என்றாலும் 2003 மற்றும் 2011 தொடர்களில் சிறந்ததாக அமைந்தது” என கூறினார்.

Advertisement