சச்சின் சிங்கம் மாதிரி.. விராட் கோலி தான் நம்பர்.. ஏபிடி உட்பட டாப் 5 ஒன்டே பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுத்த சேவாக்

Virender Sehwag 2
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. மினி உலகக் கோப்பை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் டாப் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களில் தம்முடைய சிறந்த ஐந்து பேட்ஸ்மேன்களை முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் தேர்ந்தெடுத்துள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கிறிஸ் கெயில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் துவக்க வீரர். 2002 – 03இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு இந்தியா சென்ற போது 6 போட்டிகள் கொண்டத் தொடரில் அவர் 3 சதங்கள் அடித்தது எனக்கு நினைவிருக்கிறது. சர்வதேச அளவில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பின்னங்காலில் சிக்ஸர் அடித்த முதல் பேட்ஸ்மேனாக அவரைத்தான் நான் பார்த்தேன்”

- Advertisement -

டாப் 5 பேட்ஸ்மேன்கள்:

“4வது இடத்தில் ஏபி டீ வில்லியர்ஸ். அவர் விளையாடிய விதத்தை நான் மிகவும் விரும்பினேன். பேலன்ஸ் இல்லாமலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய ஒரே பேட்ஸ்மேன் அவர் தான். 3வதாக இன்சமாம்-உல்-ஹக். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தில் இருந்து விளையாடிய ஒரு சிறந்த வீரர் அவர் நான்காவது இடத்தில் வந்து போட்டியை கட்டுப்படுத்தக்கூடியவர்”

“எனவே போட்டியை எப்படி கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை அவரிடம் நான் கற்றுக் கொண்டேன். அந்த காலகட்டங்களில் ஓவருக்கு 7, 8 ரன்களை சேசிங் செய்வது கூட கடினமாகும். ஆனால் இன்சமாம் அதை சிரிப்புடன் செய்வார். ஏனெனில் அவர் சூழ்நிலையை கணக்கிட்டு சமயம் பார்த்து சிக்ஸர் அடிப்பார். சச்சின் டெண்டுல்கர் அனைவருக்கும் பிடித்தவர் மற்றும் என்னுடைய ரோல் மாடல்”

- Advertisement -

சேவாக்கின் தேர்வு:

“அவருடன் பேட்டிங் செய்ய களத்திற்கு செல்வது எனக்கு சிங்கத்துடன் வேட்டைக்குச் செல்வதை போன்ற உணர்வைக் கொடுக்கும். அனைவரது பார்வையில் அவர் சிங்கத்தைப் போல் தெரிவார். அவருடன் சேர்ந்து நான் அமைதியாக எனது ரன்களை அடிப்பேன். விராட் கோலி தான் இந்தப் பட்டியலில் நம்பர் ஒன். எவ்வளவு பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் ஒரே ஒரு சேஸ் மாஸ்டர் தான் இருப்பார்”

இதையும் படிங்க: பும்ராவை விட கூடுதலாக ஷமிக்கு அந்த ப்ளஸ் இருக்கு.. நாம ஜெயிக்க அவர் முக்கியம் – லட்சுமிபதி பாலாஜி

“இன்று இருக்கும் விராட் கோலி ஆரம்பத்தில் இல்லை. அவர் நிறைய நேரத்தை எடுத்துக் கொண்டு கற்றுக் கொண்டார் 2011 – 12க்குப்பின் அவர் நிறைய மாறியுள்ளார். தன்னுடைய ஃபிட்னஸ் மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகளில் முன்னேறியுள்ளார். அவர் நிறைய அற்புதமான இன்னிங்ஸ்களையும் விளையாடியுள்ளார்” என்று கூறினார்.

Advertisement