எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள வேளையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக வெளியேறியுள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நம்பர் 1 பவுலரான அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
பும்ரா இல்லனாலும் முகமது ஷமி இந்திய அணியை காப்பாற்றுவார் :
ஒருபுறம் பும்ரா வெளியேறி இருந்தாலும் அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் தற்போதைய வேகப்பந்து கூட்டணியை பொறுத்தவரை முகமது ஷமி மட்டுமே அனுபவிக்க வீரராக இருக்கிறார்.
அவரை தவிர்த்து ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் போன்ற அனுபவம் குறைந்த வீரர்கள் மட்டுமே இருக்கின்றனர். நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஹார்திக் பாண்டியா இருக்கிறார். இதில் இந்திய அணி பெரும்பாலும் முகமது ஷமியை நம்பியே இந்த தொடரில் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தாலும் முகமது ஷமி மீண்டும் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணியை முன்னிட்டு வழி நடத்துவார் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான லட்சுமிபதி பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ரா அனைத்து வடிவங்களிலும் சாம்பியன் பவுலர் தான் அதில் சந்தேகமே கிடையாது.
ஆனாலும் பும்ரா வருவதற்கு முன்பாகவே இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட்டை சுமந்தவர் முகமது ஷமி தான். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் சரி, 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் சரி பும்ராவை விட முகமது ஷமி மிகச் சிறப்பாக பந்துவீசிய அனுபவம் உடையவர். எனவே அவரது அனுபவம் நிச்சயம் இந்த முறையையும் அவருக்கு கூடுதல் சாதகத்தை தரும். இந்த தொடரில் அவரே இந்திய அணியை முன்னின்று வழிநடத்துவார் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க : 2013இல் பிடிச்சதை இன்னும் விடல.. இது தான் ரோஹித் – தவான் ஸ்பெஷல்.. தோனியின் மாஸ்டர்ஸ்ட்ரோக் பற்றி ரெய்னா பேட்டி
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை நாம் வெல்ல வேண்டுமெனில் ஷமி மீண்டும் தனது சிறப்பான பந்துவீச்சுக்கு திரும்ப வேண்டியது அவசியம். புதிய பந்தில் அவர் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் இந்திய அணிக்கு பெரிய சாதகத்தை அளிக்கும் என பாலாஜி கூறியது குறிப்பிடத்தக்கது.



