ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்குகிறது. அதில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட்டுகிறது. கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையில் வென்ற இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. முன்னதாக 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் தோனி எடுத்த ஒரு அற்புதமான முடிவே ரோகித் சர்மா – ஷிகர் தவானை ஓப்பனிங் ஜோடியாக களமிறக்கியதாகும்.
அதற்கு முன்பு வரை மிடில் ஆர்டரில் தடுமாறிய அவர்களை அப்போதைய கேப்டன் தோனி புதிய துவக்க வீரர்களாக களமிறக்கினார். அதைப் பயன்படுத்தி அட்டகாசமாக விளையாடிய அவர்கள் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினர். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் கங்குலிக்கு பின் அதிக ரன்கள் குவித்த இந்திய ஜோடியாகவும் அவர்கள் சாதனை படைத்தார்கள்.
ரோஹித் – தவான் ஜோடி:
இந்நிலையில் அந்தத் தொடரில் பெற்ற வாய்ப்பை இன்று முதல் ரோகித் இறுக்கமாக பிடித்துள்ளதாக சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். மேலும் ரோஹித் – தவான் நல்ல புரிதலுடன் 10 வருடங்களாக அசத்தியது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் பேட்டிங் செய்த விதத்தை பாருங்கள். அவர்கள் அதிரடியாக அடிப்பதை விட டைமிங்கில் கவனம் செலுத்தினார்கள்”
“அவர்கள் தகுதியான பந்துகளை மட்டுமே அட்டாக் செய்தார்கள். ரோகித் சர்மா டெக்னிக்கல் அடிப்படையில் சிறந்தவர். அவர் அதிரடியை துவக்குவதற்கு முன் பந்தை தேய்த்து விடுவார். ஷிகர் தவான் இறங்கி வந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொள்வார். இடது வலது கை பேட்ஸ்மேன்கள் எப்போதுமே பவுலர்களுக்கு சவாலைக் கொடுக்கக் கூடியவர்கள். தவான் வித்தியாசமான வழியில் அதிரடியாக விளையாடக் கூடியவர்”
இன்னும் விடல:
“ரோஹித் தாம் விரும்பும் நேரத்தில் சிக்ஸரை அடிக்கக்கூடியவர். அவர்கள் 8 – 9 ரன்ரேட்டில் தொடர்ந்து விளையாடக் கூடியவர்கள். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தால் அவர்கள் அதை வேகமாக 150ஆக மாற்றி விடுவார்கள். அதில் ஒருவர் சதத்தை அடிப்பதற்கு பார்ப்பார்கள். அந்த வகையில் அவர்களுடைய புரிதல் மிகவும் சிறப்பாக இருந்தது”
இதையும் படிங்க: பாபரை விட கோலி வேற லெவல்.. அவங்கள விட அந்த இந்தியர் தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்.. அப்துர் ரவூப்
“ரோஹித் சர்மாவின் டைமிங் அற்புதமாக இருக்கும். அவர் தன்னுடைய பேட்டிங்கில் உழைத்து முன்னேறியுள்ளார். பிளட்சர், எம்எஸ் தோனியுடன் அவர் அந்தத் தொடரில் சிறந்த உறவைக் கொண்டிருந்தார். பெரிய தொடர்கள் தான் பெரிய வீரர்களை உருவாக்கும். ஏனெனில் பெரிய கோப்பை அங்கே பரிசாக காத்திருக்கும். 2011 உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்கப்படாத ரோகித் 2013ல் கிடைத்த ஓப்பனிங் வாய்ப்பை என்றும் பிடித்துள்ளார்” என்று கூறினார்.



