- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் கம்பீருக்கு பெருசா சவால் ஒன்னுமில்ல.. காரணம் இது தான்.. சேவாக் வெளிப்படை

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். 2007 மற்றும் 2011 ஐசிசி உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் கேப்டனாக 2 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அதனால் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் விடைபெற்ற ராகுல் டிராவிட்டுக்கு பின் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய வழிகாட்டுதலில் இலங்கைக்கு எதிராக விளையாடிய டி20 தொடரில் தொடரில் இந்தியா வென்றது. இருப்பினும் ஒருநாள் தொடரில் 21 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிராக இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்தத் தொடரில் கௌதம் கம்பீர் பேட்டிங் வரிசையில் செய்த சில மாற்றங்கள் தோல்விக்கு காரணமானது.

- Advertisement -

பெருசா வேலையில்ல:

அதனால் தோல்விக்கு அவர் காரணமானதாக விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இந்திய அணியில் கௌதம் கம்பீருக்கு பெரிய வேலையும் சவாலும் இருக்காது என்று அவருடைய முன்னாள் பேட்டிங் பார்ட்னர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார். ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் பெரும்பாலும் சாம்பியன் வீரர்கள் இருப்பதாக சேவாக் கூறியுள்ளார்.

எனவே திறமையான இந்திய வீரர்களுக்கு அவர்களுடைய வேலையைப் பற்றிய விளக்கத்தை மட்டும் கம்பீர் கொடுத்தால் போதும் என்று சேவாக் கூறியுள்ளார். மற்ற வேலைகளை நம் வீரர்கள் களத்தில் செய்து இந்தியாவை வெற்றி பெற வைப்பார்கள் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

திறமையான இந்திய வீரர்கள்:

“இந்திய அணியில் நிறைய சவால்கள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் தொழில்முறையில் விளையாடுகின்றனர். சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற வீரர்களுக்கு அவர்களுடைய வேலை என்ன என்பது தெரியும். தற்போது கௌதம் கம்பீர் வருகையால் வீரர்கள் தங்களுடைய வேலையின் தெளிவை பெறுவார்கள். அது இந்திய அணிக்கு உதவும்”

இதையும் படிங்க: 221 ரன்ஸ்.. ஒன்டே மேட்ச் போல இலங்கையை நொறுக்கும் இங்கிலாந்து.. 1990க்குப்பின் போப் அதிரடி சாதனை

“உண்மையில் கௌதம் கம்பீருக்கு சவால்கள் குறைவாகவும் நம் வீரர்களுக்கு அதிகமாகவும் இருக்கும். ஏனெனில் தற்போது டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள நாம் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி அல்லது ஒருநாள் உலகக் கோப்பை அல்லது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல வேண்டும் என்று வீரர்களே கருதுவார்கள். எனவே பயிற்சியாளரை விட வீரர்களுக்கு தான் சவால்கள் அதிகம். அவர்களுக்கு உதவுவது மட்டுமே கம்பீர் வேலை” என்று கூறினார்.

- Advertisement -