ஜடேஜா ஸ்ட்ரைக் ரேட் யூஸ்லெஸ்.. அவரை மிஸ் செய்யும் சிஎஸ்கே ப்ரேவிஸ் இடத்தை மாத்தனும்.. சேவாக் கருத்து

Virender Sehwag 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி சேப்பாக்கத்தில் 43வது போட்டி பெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற சென்னை தங்களுடைய 7வது தோல்வியைப் பதிவு செய்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் தொடரும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை 99% இழந்துள்ளது.

அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 155 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. ஜடேஜா, தோனி, துபே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதிகபட்சமாக தேவால்ட் ப்ரேவிஸ் 42, ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் எடுத்தார்கள். அந்த இலக்கை ஹைதராபாத் 18.4 ஓவரிலேயே எடுத்து தங்களுடைய 3வது வெற்றியைப் பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

யூஸ்லெஸ் ஸ்ட்ரைக் ரேட்:

இந்நிலையில் இந்த வருடம் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் எப்போது வீட்டுக்கு போகலாம்? என்ற வகையில் பேட்டிங் செய்வதாக வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். மேலும் அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா எப்போதும் 120 – 130 என்ற பயனற்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதாகவும் சேவாக் சாடியுள்ளார். அத்துடன் ருதுராஜை மிஸ் செய்யும் சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் சாம் கரணுக்கு பதில் தேவால்ட் ப்ரேவிஸ் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் சேவாக் பேசியது பின்வருமாறு. “இந்தத் தொடரின் பாதியிலேயே நான் வர்ணனை செய்வதை விட்டுவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அந்த வழியில் சிந்தனை செய்கிறார்கள். அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் எப்போது வீட்டுக்கு செல்வோம்? என்று காத்திருக்கிறார்கள்”

- Advertisement -

பேட்டிங் வரிசை மாறனும்:

“குறைந்தபட்சம் அவர்களில் ஒருவர் பொறுப்பை எடுத்து விளையாடியிருக்க வேண்டும். ரவீந்திர ஜடேஜா யூஸ்லெஸ் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். அதற்கு பதில் அவர் 15 – 18வது ஓவர் வரை நிலைத்து விளையாட முயற்சி செய்திருக்க வேண்டும். சாம் கரண் 3வது இடத்தில் என்ன செய்கிறார்? என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. துபாயில் நடைபெற்ற இஎல் டி20 தொடரில் அவர் 4வது இடத்தில் களமிறங்கி புத்திசாலித்தனமாக விளையாடினார்”

இதையும் படிங்க: பாகிஸ்தான் ஜோக் பண்றாங்களா? இனிமேலும் இந்தியா பொறுத்துக்காம இதை செய்யனும்.. கங்குலி விளாசல்

“ஆனால் சென்னை பேட்டிங் வரிசையில் உங்களிடம் தேவால்ட் ப்ரேவிஸ் இருந்தால் நீங்கள் அவரைத் தான் 3வது இடத்தில் விளையாட வைக்க வேண்டும். அதன் பின் துபே ஜடேஜா, சாம் கரண், தீபக் ஹூடா என்ற வகையில் சென்னை பேட்டிங் வரிசை இருக்க வேண்டும். தற்போது சென்னை அணி ருதுராஜ் போன்ற தொடர்ச்சியாக ரன்கள் அடிக்கக்கூடிய பேட்ஸ்மேனை அதிகமாக மிஸ் செய்கிறது” என்று கூறினார்.

Advertisement