உங்களோட புதிய அலெஸ்டர் குக் ஐபிஎல் தொடருக்கு தேவையில்லையா.. இங்கிலாந்தை கலாய்த்த சேவாக்

Virender Sehwag
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் 13 வருடங்கள் கழித்து இந்தியா சமன் செய்து அசத்தியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அந்தத் தொடருக்கு அடுத்தபடியாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

ஜனவரி மாதம் 25ஆம் தேதி துவங்கி ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற உள்ள அந்தத் தொடரில் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா அதன் பின் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.

- Advertisement -

கலாய்த்த சேவாக்:
இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் ஆகியோரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான அணுகுமுறையை பின்பற்றி தொடர் வெற்றிகளை பெற்று வரும் இங்கிலாந்து இம்முறை இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்காக பிரத்தியேகமான சமையல்காரரை (ஃசெப்) இங்கிலாந்து அணியினர் இந்தியாவுக்கு அழைத்து வர உள்ளதாக டெலிகிராப் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது இந்தியாவில் இருக்கும் சமையல்காரர்கள் அவர்களுடைய ஸ்டைலில் செய்து கொடுக்கும் உணவுகளால் இங்கிலாந்து வீரர்களின் உடல்நிலை பாதிக்கப்படலாம் என்று அந்நாட்டு வாரியம் கருகிறது. அதனால் 5 போட்டிகள் கொண்ட இந்த மெகா தொடரில் தங்களுடைய வீரர்கள் நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியத்துடன் விளையாடுவதற்காக பிரத்தியேக உயர்தர சமையல்காரரை இங்கிலாந்து அணியுடன் அனுப்பி வைக்க அந்நாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இந்த செய்தியை பார்த்த முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் ட்விட்டரில் அதிரடியாக கலாய்த்துள்ளது பின்வருமாறு. “இந்த சமையல்காரருக்கான தேவை குக் சென்றதும் வந்துள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரின் போது இதற்கான தேவை இருக்காது” என்று கூறியுள்ளார். அதாவது முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பெயரிலேயே சமையல்காரர் (குக்) என்ற பொருள் உள்ளதை அனைவரும் அறிவோம்.

இதையும் படிங்க: 2 தமிழக வீரர்களுக்கு இடம்.. இங்கிலாந்து தொடருக்கான பயிற்சி போட்டிக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு

அந்த வகையில் குக் ஓய்வு பெற்றதும் தற்போது அவருக்கு பதிலாக மாற்று சமையல்காரரை இங்கிலாந்து அழைத்து வர உள்ளதாக சேவாக் கலாய்த்துள்ளார். அதே சமயம் ஐபிஎல் தொடரில் விளையாடும் போது தங்கள் நாட்டு சமையல்காரர்களுக்கு பதிலாக இந்தியாவின் சமையல்காரர்களே இங்கிலாந்து வீரர்களுக்கு போதுமானதாக இருப்பதாகவும் சேவாக் கிண்டலடித்துள்ளார்.

Advertisement