தோனிக்காக சமளிக்காதீங்க ரெய்னா ஜீ.. அவரையும் கொஞ்சம் காட்ட சொல்லுங்க.. நேரலையில் கலாய்த்த சேவாக்

Sehwag and Raina
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த அணிக்காக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள ஜாம்பவான் எம்எஸ் தோனி தொடர் துவங்குவதற்கு ஒருநாள் முன்பாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கைக்வாட் கையில் ஒப்படைப்பதாக அறிவித்தார்.

அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் தோனியின் கேப்டன்ஷிப் சகாப்தம் நிறைவு பெற்றது ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் சேப்பாக்கத்தில் மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் ருதுராஜ் தலைமையில் வெற்றி கண்ட சென்னை 6வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.

- Advertisement -

கலாய்த்த சேவாக்:
முன்னதாக அந்த போட்டியில் தோனி சாதாரண விக்கெட் கீப்பராக மட்டுமே செயல்பட்டார். மறுபுறம் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் ஒவ்வொரு ஓவருக்கும் யாருக்கு பவுலிங் கொடுப்பது, ஃபீல்டர்களை எப்படி நிறுத்துவது போன்ற வழக்கமான வேலைகளை செய்தார். ஆனாலும் தோனியையே அதிகமாக ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதால் ருதுராஜை அதிகம் காட்டாத கேமராமேன் அவரையே காண்பித்தார்.

இந்த தருணத்தை ஜியோ சினிமா சேனலில் முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் வர்ணித்தது பின்வருமாறு.
ரெய்னா: இன்று நீங்கள் ருதுராஜ் கேப்டன்ஷியை பாராட்ட வேண்டும். அவர் சரியான பவுலிங் மாற்றங்களை செய்தார். அதை நீங்கள் பாருங்கள்
சேவாக்: இன்று ருதுராஜ் தான் உண்மையாக கேப்டன்ஷிப் செய்கிறாரா?
ரெய்னா: ஆம் கண்டிப்பாக இன்று தோனி விக்கெட் கீப்பிங் இடத்தில் நிற்கிறார். ஆனால் ஃபீல்டர்களை ருதுராஜ் தான் மாற்றுகிறார்

- Advertisement -

சேவாக் : “ஆனால் கேமராவை பார்க்கும் போது பெரும்பாலும் தோனி வேலை செய்வதாகவே தெரிகிறது” என்று கூறினார். அப்போது கேமராமேன் ஜியோ சினிமா சேனலில் ஒரு குறிப்பிட்ட வீரரை மட்டும் படப்பிடிக்கும் ஹீரோ கேமராவை திறந்து காட்டினார். அதில் சேவாக் சொன்னது போலவே தோனி தான் ஃபீல்டர்களை அங்கேயும் இங்கேயும் செட்டிங் செய்து கொண்டிருந்தது தெரிந்தது.

இதையும் படிங்க: அந்த 2 இந்திய பவுலர்கள் என்னை சோதிச்சிட்டாங்க.. ஆனா அதிர்ஷ்டம் கைகொடுத்துச்சு.. ஆட்டநாயகன் சாம் கரண்

அதனால் வேறு வழி இல்லாத ரெய்னா. “ஆம் தோனி தான் கேப்டனாக செயல்படுவது போல் தெரிகிறது” என்று சேவாக்கிடம் சொல்லி சிரித்தார். அப்போது. “பிரதர். ருதுராஜ் முகத்தையும் காட்டுங்கள். அவர் தான் கேப்டன். ஆனால் கேமராமேன் தோனியை மட்டுமே காட்டுகிறார்” என்று சொன்ன சேவாக் கேமராமேனை கலாய்த்தார். இருப்பினும் சீனியர் என்ற முறையிலும் விக்கெட் கீப்பர் என்ற முறையிலும் தோனி இப்படி ருதுராஜ்க்கு உதவி செய்வதில் ஆச்சரியமில்லை என்றே சொல்லலாம்.

Advertisement