அந்த 2 இந்திய பவுலர்கள் என்னை சோதிச்சிட்டாங்க.. ஆனா அதிர்ஷ்டம் கைகொடுத்துச்சு.. ஆட்டநாயகன் சாம் கரண்

Sam Curran 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் டெல்லியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. முல்லான்பூர் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கடுமையாக போராடி 20 ஓவரில் 174/9 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஷாய் ஹோப் 33, அபிஷேக் போரேல் 32* ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 175 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான் 22, ஜானி பேர்ஸ்டோ 9, ப்ரப்சிம்ரன் சிங் 26, ஜிதேஷ் சர்மா 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் அசத்தலாக விளையாடிய சாம் கரண் 33 ரன்களில் கொடுத்த கேட்ச்சை டேவிட் வார்னர் தவற விட்டார்.

- Advertisement -

சாவலும் அதிர்ஷ்டமும்:
அதைப் பயன்படுத்திய அவர் அரை சதமடித்து 63 (47) ரன்கள் குவித்து டெல்லியின் வெற்றியை பறித்தார். அவருடன் லியாம் லிவிங்ஸ்டன் 38* (21) ரன்கள் அடித்து ஃபினிஷிங் கொடுத்ததால் 19.2 ஓவரிலேயே இலக்கை தொட்ட பஞ்சாப் இந்த வருட ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக துவக்கியுள்ளது. மறுபுறம் சுமாராக செயல்பட்ட டெல்லி சார்பில் அதிகபட்சமாக கலீல் அஹமத், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் இந்த போட்டியில் அக்சர் படேல், குல்தீப் ஆகிய 2 இந்திய பவுலர்கள் தமக்கு சவாலை கொடுத்ததற்கு கொடுத்ததாக சாம் கரண் தெரிவித்துள்ளார். மேலும் கேட்ச் தவற விட்டதால் அதிர்ஷ்டம் கிடைத்ததாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி ஆட்டநாயகன் விருது வென்ற பின் பேசியது பின்வருமாறு. “உண்மையிலேயே மகிழ்ச்சி. புதிய மைதானத்தில் தொடரை வெற்றியுடன் துவக்குவதை விட சிறந்த வழி இருக்காது. இந்தியாவுக்காக அதிகமான கிரிக்கெட்டை விளையாடிய அக்சர் படேல், குல்தீப் ஆகிய உலகத்தரம் வாய்ந்தவர்கள்”

“ஆனால் போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்றால் வெற்றி பெற முடியும் என்பதை நாங்கள் அறிவோம். என்னுடைய சக நாட்டு வீரர் லிவிங்ஸ்டனுடன் சேர்ந்து பேட்டிங் செய்தது ஸ்பெஷல். முக்கியமான நேரத்தில் நான் ரிஸ்க் எடுத்து விளையாடிய போது அதிர்ஷ்டம் எனக்கு கை கொடுத்தது. இரவு நேரத்தில் பிட்ச் நன்றாக இருந்தது. பந்து அதிகமாக சுழலவில்லை. வேகம் நன்றாக வந்தது. இந்த வருடம் எங்களுக்கு புதிதாக சில வீரர்கள் வந்துள்ளனர். எனவே பெங்களூருவில் நாங்கள் வித்தியாசமாக முயற்சிப்போம். இப்போது வெற்றி பெற்றது முக்கியம்” என்று கூறினார்.

Advertisement