- Advertisement -
இந்திய கிரிக்கெட்

20க்கும் 120க்கும் செட்டாகாது.. கவலையில்லாத சேவாக் என்னோட பெஸ்ட் பேட்டிங் பார்ட்னர் கிடையாது.. பத்ரிநாத் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மிகச்சிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். டி20 போட்டிகள் வராத காலத்திலேயே அதிரடியாக விளையாடிய அவர் முதல் ஓவரிலேயே பவுண்டரியை பறக்க விட்டு ஆட்டத்தை துவங்குவது வழக்கமாகும். அதே போல பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் 90 ரன்களை கடந்து விட்டால் சதத்தை தொடுவதற்காக பதற்றத்துடன் மெதுவாக விளையாடுவது வழக்கமாகும்.

ஆனால் அதற்கு நேர்மாறாக 90, 190, 290 ரன்களில் இருந்தால் தன்னுடைய சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் சேவாக் பவுண்டரி அல்லது சிக்சரை அடித்து சதத்தை தொடும் ஸ்டைலை கொண்டிருந்தார். மேலும் மெதுவாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடிய அவர் 2 முச்சதங்கள் அடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக வரலாறு படைத்துள்ளார்.

- Advertisement -

சிறந்த பார்ட்னர் கிடையாது:

இந்நிலையில் சேவாக் துவக்க வீரராக விளையாடிய காலத்தில் இந்தியாவுக்காக அறிமுகமான தமிழக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் 2 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அதில் அதிரடியாக விளையாடக்கூடிய வீரந்தர சேவாக் வேகத்திற்கு தம்மால் ஈடு கொடுக்க முடியவில்லை என்று பத்ரிநாத் வெளிப்படையாக கூறியுள்ளார். எனவே சேவாக் தம்முடைய சிறந்த பேட்டிங் பார்ட்னர் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே சமயம் சேவாக் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்கி வேகமாக ரன்கள் குவிக்க கூடியவர் என்றும் பத்ரிநாத் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் பின்வருமாறு. “வீரேந்திர சேவாக் பேட்டிங் செய்வதற்கு ஒரு மிகச் சிறந்த பார்ட்னர். ஆனால் எனக்கு அது அப்படியே நேர்மாறாக இருந்தது”

- Advertisement -

அதிரடி சேவாக்:

“ஏனெனில் நான் எப்போதும் கொஞ்சம் பதற்றமாக இருந்து என் மீது எதிர்பார்ப்புடன் விளையாடுவேன். ஆனால் சேவாக் முற்றிலும் ரிலாக்ஸாக எந்த கவலையும் இல்லாதது போல் விளையாடுவார். அதே சமயம் அவர் கவனக்குறைவின்றி விளையாடுவார் என்று சொல்வேன். ஃபைன் லைனில் அவர் சமநிலையை கச்சிதமாக விளையாடுவார்”

இதையும் படிங்க: 216 ரன்ஸ்.. ருதுராஜ் அணிக்கு சவால் கொடுக்கும் ஈஸ்வரன்.. போட்டி ட்ராவில் முடிந்தால் வெற்றி யாருக்கு?

“எனவே அவருடன் நான் பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். ஆனால் அவர் என்னுடைய சிறந்த பேட்டிங் பார்ட்னர் கிடையாது. ஏனெனில் நான் 20 ரன்கள் எடுப்பதற்குள் அவர் 120 ரன்கள் அல்லது அரை சதம் எடுத்திருப்பார். அவர் முற்றிலும் வித்தியாசமான வேகத்தில் விளையாடுவார். தன்னுடைய சொந்த உலகத்தில் அதிரடியாக விளையாடக்கூடிய அவர் அற்புதமான பேட்டிங் பார்ட்னர். அவருடன் என்னுடைய நேரங்களை நான் மகிழ்ச்சியாக செலவழித்தேன்” என்று கூறினார்.

- Advertisement -