இதான் கரெக்ட்.. அவங்கள இப்படி தான் நடத்தனும்.. தனது ஸ்டைலில் சதமடித்த ஜெய்ஸ்வாலுக்கு சேவாக் பாராட்டு

Virender Sehwag 3
- Advertisement -

ராஜ்கோட் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இந்தியா 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து சுமாராக விளையாடி 319 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சொல்லப்போனால் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி சதமடித்து 153 (151) ரன்கள் குவித்ததால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 224/2 வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த 95 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை எடுத்து அந்த அணியை சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

சேவாக் பாராட்டு:
அதைத் தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 197/2 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 19, ரஜத் படிடார் 0 ரன்களில் அவுட்டானாலும் ஜெயஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து 104* ரன்களும் சுப்மன் கில் அரை சதமடித்து 65* ரன்களும் எடுத்து முன்னிலை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

முன்னதாக இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அசத்தலாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் 49 ரன்களில் இருந்த போது சுழல் பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லிக்கு எதிராக சிக்சரை விளாசி 50 ரன்கள் தொட்டார். அதை விட 96 ரன்களில் இருந்த போது 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய மார்க் வுட்டுக்கு எதிராக பவுண்டரியை பறக்க விட்ட அவர் சதமடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

- Advertisement -

மேலும் கடந்த போட்டியில் மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட எடுக்காத போது தனி ஒருவனாக 209 ரன்கள் விளாசிய அவர் ஜாம்பவான் சேவாக் போலவே 50, 100, 150, 200 ரன்களை பவுண்டரி அல்லது சிக்ஸருடன் தொட்டு தன்னை பயமறியாத வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஸ்பின்னர்களை அடித்து நொறுக்கி எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி ஜெய்ஸ்வால் நடத்துவதாக வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: சொந்த மண்ணில் அவர்கிட்ட வீக்னெஸ் கூட இல்ல.. ஆனா வெளிநாட்டு சாதிக்க முடியுமா? பீட்டர்சன் சவால்

இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தடுத்த சதங்கள். அவர் ஸ்பின்னர்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமோ அப்படி நடத்துகிறார். தே தானா தன்” என்று பதிவிட்டுள்ளார். அதாவது தம்மை போலவே ஸ்பின்னர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் ஜெய்ஸ்வால் அதிரடியாக எதிர்கொண்டு விளையாடுவதாக சேவாக் மறைமுகமாக பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement