சொந்த மண்ணில் அவர்கிட்ட வீக்னெஸ் கூட இல்ல.. ஆனா வெளிநாட்டுல சாதிக்க முடியுமா? பீட்டர்சன் சவால்

Kevin Pieterson 4
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து பென் டக்கெட் அதிரடியாக சதமடித்து 153 (151) ரன்கள் எடுத்த உதவியுடன் ஒரு கட்டத்தில் 224/2 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் அபாரமாக பந்து வீசிய இந்தியா அடுத்த 95 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தை 319 ரன்களுக்கு சுருட்டியது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

வெளிநாட்டில் சாதிக்கணும்:
அதைத் தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில் 196/2 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் ஜெய்ஸ்வால் சதமடித்து 14* ரன்களும் சுப்மன் கில் அரை சதமடித்து 65* ரன்களும் எடுத்துள்ளனர். அதனால் இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா இப்போட்டியில் வெற்றிக்கான அடித்தளத்தை வலுவாக அமைந்துள்ளது.

முன்னதாக இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய ஜெய்ஸ்வால் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 3வது சதத்தை அடித்தார். கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது தனி ஒருவனாக 209 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய அவர் தற்போது மீண்டும் சதமடித்து தன்னை வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சொந்த மண்ணில் பலவீனமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அசத்தும் ஜெயிஸ்வால் வெளிநாடுகளில் சாதித்துக் காட்ட வேண்டும் என்று இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டுடன் சவாலை வைத்துள்ளார். இது பற்றி ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்திய சூழ்நிலைகளில் ஜெயஸ்வால் ஆட்டத்தில் ஒரு பலவீனம் கூட இருப்பதாக எனக்குத் தெரியவில்லை”

இதையும் படிங்க: உங்களை நம்பி வாயை விட்டேன்.. இப்படி பண்ணா எப்படி ஜெயிக்க முடியும்.. இங்கிலாந்தை விளாசிய குக்

“இருப்பினும் சொந்த மண்ணுக்கு வெளியே ரன்கள் அடிப்பது தான் அவருக்கு மகத்தான சவாலாக இருக்கும். கேரியரின் முடிவில் உங்களை மகத்தான வீரர் என்று மதிப்பிடுவதற்கு நீங்கள் சொந்த மண்ணுக்கு வெளியே அனைத்து சூழ்நிலைகளிலும் சதங்கள் அடித்திருக்க வேண்டும் “என்று கூறினார். அதாவது வெஸ்ட் இண்டீஸ் மட்டுமல்லாமல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் ஜெய்ஸ்வால் சதமடிக்க வேண்டும் என்று பீட்டர்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement