இந்தியாவுக்கு எதிராக ராஜ்கோட் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தடுமாறி வருகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் எடுத்தது. அதன் பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து போராடி 319 ரன்கள் மட்டுமே இருந்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் டக்கெட் அதிரடியாக விளையாடி 153 (151) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 196/2 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது.
குக் விமர்சனம்:
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 19, ரஜத் படிதார் 0 ரன்களில் அவுட்டானாலும் ஜெய்ஸ்வால் அற்புதமான சதமடித்து 104* ரன்கள், சுப்மன் கில் 65* ரன்களும் எடுத்தனர். முன்னதாக இந்த போட்டியில் இரண்டாவது நாளில் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் விரைவாக 133 (118) ரன்கள் எடுத்ததால் 3வது நாள் உணவு இடைவெளிக்குள் இங்கிலாந்து 400 – 450 ரன்கள் அடித்து இந்தியாவை முந்தி முன்னிலை பெறும் என்று முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்திருந்தார்.
ஆனால் மூன்றாவது நாளில் அஸ்வின் இல்லாமலேயே 224/4 என்ற வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்தை அடுத்த 95 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை எடுத்து சுருட்டிய இந்தியா அவருடைய முகத்தில் கரியை பூசியது. இந்நிலையில் 800 ரன்கள் அடிப்பீர்கள் என்று நம்பி சொன்ன நம்முடைய கருத்துக்களை பொய்யாக்கிய இங்கிலாந்து அணியை அலெஸ்டர் குக் தற்போது கடுமையாக விமர்சித்துள்ளது பின்வருமாறு.
“நாளை இங்கிலாந்து 800 ரன்கள் அடிப்பார்கள் என்று நான் நேற்று சொன்னேன். தற்போது நான் அதிலிருந்து 481 ரன்கள் மட்டுமே குறைவாக சொல்லியுள்ளேன் தெரிகிறது. இப்போது வெல்வதற்கு வாய்ப்புள்ளதா? இங்கிலாந்து பேட்டிங்கில் மோசமாக விளையாடியது. அவர்கள் 116 (112) ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தனர். முதல் இன்னிங்ஸில் இப்படி விளையாடினால் உங்களால் நிறைய போட்டிகளை வெல்ல முடியாது”
இதையும் படிங்க: அஸ்வின் வேற இல்ல.. போன மேட்ச்ல டிவியில் அவரோட பவுலிங்கை பாத்து போட்டேன்.. சிராஜ் பேட்டி
“டெஸ்ட் போட்டிகளில் வெல்வதற்கு நீங்கள் நீண்ட நேரம் அசத்த வேண்டும். நேற்று சுமாராக விளையாடிய இந்தியா இன்று சிறப்பாக செயல்பட்டது. பும்ராவுக்கு எதிராக ஜோ ரூட் அப்படி ஒரு சாட்டை விளையாடலாமா என்று நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். உலகின் சிறந்த பவுலரான பும்ராவுக்கு எதிராக தொடர்ந்து தடுமாறி தடுமாறி தெரிந்தும் ரூட் அப்படி ஒரு ஷாட்டை விளையாடினார்” என்று கூறினார்.