மனசாட்சி இல்லாம பேசாதீங்க, விராட் கோலியின் இன்னிங்ஸை விமர்சித்தவர்களுக்கு – சேவாக் பதிலடி

Sehwag
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்த்த காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு மீண்டும் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் லீக் சுற்றில் தேவையான வெற்றிகளுடன் அசத்திய இந்தியா வழக்கம் போல அழுத்தமான நாக் அவுட் சுற்றில் படுதோல்வியை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் தர வரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் என்ன பயன் என்று அதிருப்தியை வெளிப்படுத்தும் ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மா உட்பட பெரும்பாலும் சுமாராக செயல்பட்ட நட்சத்திர வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Virat Kohli Suryakumar Yadav.jpeg

இந்த தொடரில் பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோராலேயே இந்தியா அரையிறுதி சுற்றைத் தொட்டது என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கி முக்கிய நேரத்தில் பார்முக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அதே புத்துணர்ச்சியுடன் இந்த உலகக் கோப்பையில் முதல் கிரிக்கெட் போட்டியிலேயே பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடி அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

விமர்சனம் நியாயமா:

அதே போல் எஞ்சிய போட்டிகளிலும் அசத்திய அவர் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் (296) குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த போதிலும் இதர வீரர்களின் சொதப்பலால் கோப்பையை வெல்ல முடியவில்லை. முன்னதாக 2014, 2016 உலகக் கோப்பைகளிலும் இதே போல் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தும் கோப்பையை வெல்ல முடியாமல் சந்தித்த ஏமாற்றத்தை மீண்டும் இப்போது அவர் சந்தித்துள்ளது ரசிகர்களை சோகமடைய வைத்தது.

Virat Kohli IND vs ENG

முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என முக்கிய வீரர்கள் மீண்டும் சொதப்பியதால் தடுமாறிய இந்தியாவுக்கு நங்கூரமாக நின்று போராடிய விராட் கோலி 50 (40) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் பாண்டியா 63 (33) ரன்கள் குவித்து அதிரடி காட்டியதால் இந்தியா எடுத்த 168 ரன்களை இங்கிலாந்து அசால்டாக துரத்தியது வேறு கதை. ஆனால் அப்போட்டியில் இதர பேட்ஸ்மேன்கள் சொதப்பிய வேளையில் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த விராட் கோலி இன்னும் சற்று அதிரடியான வேகத்தில் விளையாடியிருக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

இந்நிலையில் ஃபைனலில் சேசிங் செய்யும் போது ரொம்பவே மெதுவாக விளையாடி 49 பந்துகளில் பென் ஸ்டோக்ஸ் எடுத்த 52* ரன்களை உலகமே பாராட்டுவது போல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி எடுத்த 50 ரன்கள் சேசிங் செய்யும் போது வந்திருந்தால் இந்த விமர்சனங்கள் வந்திருக்காது என்று முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Sehwag

“பென் ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்திருந்தால் அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்திருப்பார். இருப்பினும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடியதால் அவரது இன்னிங்ஸ் பேப்பரில் சிறந்ததாக காட்சியளிக்கிறது. இந்த வேளையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்றதால் விராட் கோலியின் இன்னிங்ஸ் பற்றி நாம் விமர்சிக்கிறோம். அப்போட்டில் இந்தியா வென்றிருந்தால் அவரின் இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானதாக மாறியிருந்திருக்கும்”

“சொல்லப்போனால் அந்த இன்னிங்ஸ் காரணமாகவே இந்தியா 168 ரன்களை எடுத்தது. இங்கே பென் ஸ்டோக்ஸ் அவுட்டாகாமல் 52 ரன்கள் எடுத்து ஒரு ஓவர் மீதம் வைத்து வெற்றி பெற வைத்தார். அதனாலயே அவருடைய இன்னும் சிறந்ததாக தெரிகிறது” என்று கூறினார். அதாவது விராட் கோலியை விட மெதுவாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் இங்கிலாந்து வென்றதால் கொண்டாடப்படுவதாக வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். ஆனால் இந்தியா தோற்றதால் விராட் கோலி எடுத்த முக்கியமான 50 (40) ரன்களை அனைவரும் துச்சமாக எண்ணி மனசாட்சியின்றி விமர்சிப்பதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement