IPL 2023 : ஃபைனலில் குஜராத் தோற்க நீங்க தான் காரணம் – பாண்டியாவை விளாசும் கவாஸ்கர், சேவாக், நடந்தது என்ன?

Sunil Gavaskar Sehwag
- Advertisement -

உச்சகட்ட பரபரப்புடன் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை அதன் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது. மழையால் ரிசர்வ் நாளில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் சாய் சுதர்சன் 96 (47) ரன்களை எடுத்து அதிரடியில் 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணித்தது. அதைத்தொடர்ந்து 15 ஓவரில் 171 ரன்கள் என்ற புதிய இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26, டேவோன் கான்வே 47, சிவம் துபே 32*, ரகானே 27, ராயுடு 19 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்தனர்.

- Advertisement -

ஆனாலும் கடைசி நேரத்தில் மோஹித் சர்மா மிகவும் துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசியதால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது துபே, ஜடேஜா ஆகிய இருவருமே முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதனால் குஜராத்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான காரணத்தால் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் பெவிலியனில் அமர்ந்திருந்த குஜராத்தை சேர்ந்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோரும் முன்கூட்டியே சிரித்துக் கொண்டாடினர்.

விளாசிய கவாஸ்கர்:
அதை விட இந்த சீசன் முழுவதுமே என்னமோ கால்பந்தாட்டத்தை போல பவுண்டரி எல்லையின் அருகில் குட்டி போட்ட பூனையைப் போல நடந்து கொண்டே ஆலோசனைகளை கொடுத்து வந்த பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா 5வது பந்துக்கு முன்பாக பாண்டியாவிடம் ஏதோ சொல்லி அனுப்பினார். குறிப்பாக 4 பந்துகளையும் ஒரே மாதிரியாக வீசியதால் 5வது ஜடேஜாவை குழப்பும் வகையில் மாற்றி வீசுமாறு அவர் சொன்ன ஆலோசனையை அப்படியே மோகித் சர்மாவின் அருகில் சென்று பாண்டியாவும் சொன்னதாக தெரிகிறது.

Nehra-1

ஆனால் அதுவரை சிறப்பாக செயல்பட்ட மோகித் சர்மா அவர்களது ஆலோசனையால் குழப்பமடைந்து 5வது பந்தில் யார்க்கர் லென்த்தை தவற விட்டதால் சிக்சர் அடித்த ஜடேஜா கடைசி பந்திலும் ஃபைன் லெக் திசையில் பவுண்டரி அடித்து வெற்றியை பறித்தார். இந்நிலையில் சரியாக பந்து வீசிய மோகித் சர்மாவை கடைசி 2 பந்துகளில் குழப்பிய கேப்டன் பாண்டியா தான் குஜராத்தின் தோல்விக்கு காரணம் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் முதல் 3 – 4 பந்துகளை அபாரமாக வீசினார்”

- Advertisement -

“இருப்பினும் அதன் பின் தேவையற்ற காரணத்திற்காக அவருக்கு தண்ணீர் கொடுத்து அனுப்பப்பட்டது. அத்துடன் ஹர்திக் பாண்டியாவும் அவரிடம் அருகே வந்து ஏதோ பேசினார். பொதுவாக ஒரு பவுலர் நல்ல ஃபார்மில் மனதளவில் உறுதியுடன் பந்து வீசும் போது யாரும் எதுவும் சொல்லக்கூடாது. மாறாக தொலைவிலிருந்து கொண்டே கைதட்டி சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்று பாராட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு அருகில் சென்று பேசுவது சரியானதல்ல. அதனால் திடீரென மோகித் சர்மா குழம்பி அங்கேயும் இங்கேயும் வீசினார்” என்று கூறினார்.

Virender Sehwag.jpeg

அதே போல குஜராத்தின் தோல்விக்கு மோகித் சர்மாவை கடைசி நேரத்தில் பாண்டியா தொல்லை செய்ததே காரணம் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “ஒருவர் சிறப்பாக யார்கர் பந்துகளை வீசும் போது நீங்கள் ஏன் அவரிடம் சென்று பேச வேண்டும்? குறிப்பாக பேட்ஸ்மேனுக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்படும் போது பவுலருக்கு யார்கர் வீச வேண்டும் என்பது நன்றாக தெரியும்”

இதையும் படிங்க:எல்லாருக்கும் முன்மாதிரியா இருக்க வேண்டிய நீங்களே இப்படி இருக்கலாமா? ரோஹித்தை விளாசிய – சல்மான் பட்

“பின்னர் ஏன் நீங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? ஒருவேளை ஆரம்பத்திலேயே மோகித் சர்மா பவுண்டரிகளை கொடுத்திருந்தால் நீங்கள் அருகில் சென்று பேசியிருக்கலாம் அல்லது ஃபீல்டிங்கில் மாற்றம் தேவையா என்பதை வேண்டுமானால் கேட்டிருக்கலாம். அந்த இரண்டுக்குமே தேவையில்லாத சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்ட மோஹித் சர்மாவுக்கு விரைவில் அந்த ஓவரை முடிக்க நீங்கள் ஆதரவு கொடுத்திருக்க வேண்டும். எனவே நானாக இருந்திருந்தால் நிச்சயமாக மோஹித் சர்மாவை அந்த சமயத்தில் தொல்லை செய்திருக்க மாட்டேன்” என்று கூறினார்.

Advertisement