Virat Kohli : இதுக்கு மேல் மன்னிப்பு கேட்க ஏதுமில்லை. தோல்விக்கு காரணம் இது தான் – விராட் கோலி

ஐ.பி.எல் தொடரின் 20 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு பெங்களூருவில் துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின

Kohli-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 20 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு பெங்களூருவில் துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Kohli

- Advertisement -

பெங்களூரு அணி இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்து உள்ளன. அதனால் இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற உத்வேகம் காட்டும் என நம்பப்பட்டது.

ஆனால், பெங்களூரு அணி இந்த போட்டிக்காக தனது சீருடையை மாற்றியதே தவிர ஆட்டத்தின் போக்கை மாற்ற தவறியது. சென்ற போட்டியில் விளையாடிய அதே அணியோடு விளையாகிறது. டெல்லி அணியில் இருக்கும் இளம் வீரர்களை கணக்கில் கொள்ளும்போது கோலியின் அணி சுத்தமாக பலமின்றி அனைத்து துறைகளிலும் வலுவிழந்து காணப்படுகிறது.

Kohli

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்த டெல்லி அணி சிறப்பாக பந்துவீசி பெங்களூரு அணியை சுருட்டியது. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக கோலி 41 ரன்களை அடித்தார். டெல்லி அணி சார்பாக ரபாடா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களுக்கு 21 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

Ali

அதன் பின்னர் ஆடிய டெல்லி அணி ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டம் மூலம் எளிதாக வெற்றியை பெற்றது. போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய கோலி : 160 ரன்கள் இந்த போட்டிக்கு சவாலான இலக்கு என்று நினைத்தோம். ஆனால், எங்களால் 150 ரன்களே அடிக்க முடிந்தது.ஆனால் இதற்கு மேலும் நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை.

green 1

150 ரன்கள் எங்களுக்கு போதும் என்று நினைத்தேன். நான் கடைசி வரை நின்று அடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட் என்னால் ரன்களை குவிக்க முடியவில்லை. அனைத்து பேட்ஸ்மேனும் சிறப்பாகவே ஆடினர். ஆனால், பந்துவீச்சு மற்ற அணிகளை விட பலவீனமாக உள்ளது. அதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். மொத்தத்தில் தோல்வி குறித்து தற்போது எதையும் கூறமுடியாமால் உள்ளேன் என்று உருக்கமாக கூறினார்.

Advertisement