இந்திய ரசிகர்களுக்கு நன்றி. எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தோம் – கோலி உருக்கம்

Kohli

நேற்று முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Kohli

அரையிறுதி போட்டி முடிந்ததும் இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி ஏற்கனவே பேட்டியளித்துள்ளார். அதன் பிறகு தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் தோல்வி குறித்து நெகிழ்ச்சியான கருத்தினை கோலி பதிவு செய்துள்ளார்.

அதில் கோலி கூறியதாவது ; முதலில் நான் இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிக அளவிலான இந்திய ரசிகர்கள் எங்களை இங்கிலாந்தில் மைதானத்தில் நேரடியாக ஆதரித்தார்கள். நீங்கள் இந்த தொடரை எங்களுக்கு அர்த்தமுள்ளதாக்கி உள்ளீர்கள்.

ரசிகர்களாகிய நீங்கள் எங்கள் மீது காண்பித்த அன்பு மிக அதிகம். இந்த தொடரில் இருந்து வெளியேறியது உங்களுக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் வருத்தமாகவே உள்ளது. எங்களால் முடிந்த வரை நாங்கள் அனைத்தையும் கொடுத்தோம் இறுதியில் தோல்வியடைந்தது வருத்தம் அளிக்கிறது. ஜெய்ஹிந்த் என்று கூறி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.