Virat Kohli : எந்த பவுலரையும் பார்த்து எனக்கு பயமில்லை. ஆனால் இவரை கண்டால் சற்று பயமாக இருக்கிறது – கோலி

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

virat4
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

kohli1

- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது : நான் இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகி வருகிறேன். என்னை பொறுத்தவரை எந்த பந்துவீச்சாளரை பார்த்தும் நான் பயப்படப் போவதில்லை. ஆனால் இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் மட்டும் எதிர் கொள்வது சற்று சிரமம் என்று நினைக்கிறேன்.

archer

ஏனென்றால் நான் சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் ஆர்ச்சர் சர்வதேச அளவில் சிறந்த பவுலர் மேலும் அவர் என் விக்கெட் வீழ்த்துவேன் என்று கூறியுள்ளது எனக்கு தெரியாது. ஆனால் அதைப்பற்றி நான் தற்போது பயப்பட போவதில்லை யார் பந்து வீசினாலும் அதனை எதிர்கொண்டு ரன்களை குவித்து திட்டமிட்டுள்ளேன் என்று கோலி கூறினார்.

Advertisement