- Advertisement -
இந்திய கிரிக்கெட்

யாரும் அதை விராட், ரோஹித்துக்கு சொல்லத் தேவையில்ல.. பும்ரா தவிர எல்லாரும் விளையாடனும்.. புஜாரா பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். இங்கிருந்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக்கோப்பையில் விளையாடி விடை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்போது அவர்களால் 39, 40 வயதில் நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மில் அசத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.

அதனால் சுப்மன் கில் தலைமையில் இளம் அணியை உலகக் கோப்பையில் விளையாட வைக்க தேர்வுக்குழு விரும்புவதாக செய்திகள் தெரிவித்தன. அதற்கு முன்பாக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோஹித்தை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன. இருப்பினும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா மறுப்பு தெரிவித்தார்.

- Advertisement -

சொல்லத் தேவையில்லை:

ஆனால் விராட், ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற மாட்டார்கள் என்று பிசிசிஐ தெரிவிக்கப்பட்டது. கடைசியில் பார்த்தால் அவர்கள் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள். எனவே விராட், ரோஹித் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகமாகவே உள்ளது. எனவே உலகக்கோப்பை வாய்ப்பைப் பெற விராட், ரோஹித் தொடர்ச்சியாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடி தங்களை ஃபிட்டாக வைத்துக்கொள்வது அவசியம் என்று இர்பான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மகத்தான விராட் மற்றும் ரோஹித்துக்கு யாரும் எந்த ஆலோசனையும் அறிவுரையும் வழங்க தேவையில்லை என்று புஜாரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் எந்த ஆலோசனையும் கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்கள்”

- Advertisement -

உள்ளூரில் விளையாடனும்:

“ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடினால் கூட தங்கள் மேலே என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு தேவையான அனுபவம் அவர்களிடம் இருக்கிறது. அவர்கள் திறமையான வீரர்கள். விராட், ரோஹித் ஆகியோரின் ரெக்கார்டை பாருங்கள். எனவே அவர்களுக்கு எப்போது விடை பெறுவதற்கான சரியான நேரம் என்பதும் தெரியும். அதுவரை விளையாடுவதற்குத் தேவையான அர்ப்பணிப்பு பற்றி அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள்”

இதையும் படிங்க: முரளிதரனை முந்தி சிஎஸ்கே அணியில்.. அந்த உயரத்தை பிடிப்பேன்னு சொன்னதை செஞ்சு காட்டுனேன்.. அஸ்வின் பேட்டி

“எனவே ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடலாம். அனைத்து வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது முக்கியம். அதே சமயம் ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற தனித்துவமானவர் பணிச்சுமையை நிரூபிப்பதால் உள்ளூரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. மற்றபடி பணிச்சுமை பிரச்சனைகள் இல்லாத வீரர்கள் உள்ளூரில் விளையாட வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -