முரளிதரனை முந்தி சிஎஸ்கே அணியில்.. அந்த உயரத்தை பிடிப்பேன்னு சொன்னதை செஞ்சு காட்டுனேன்.. அஸ்வின் பேட்டி

R Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அவர் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த அவர் உள்ளூரில் சிறப்பாக விளையாடி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

2009இல் அறிமுகமான அவர் 2010, 2011 ஆகிய அடுத்தடுத்த கோப்பைகளை சிஎஸ்கே வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 ஐபிஎல் ஃபைனலில் கிறிஸ் கெய்ல் விக்கெட்டை அவர் எடுத்து வெற்றியில் பங்காற்றியதை மறக்க முடியாது. அதனால் இந்திய அணியிலும் அறிமுகமான அவர் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை தோனி தலைமையில் வெல்வதற்கு உதவினார்.

- Advertisement -

முரளிதரனை முந்துவேன்:

குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய அஸ்வின் கோப்பையை வெல்ல உதவியதை மறக்க முடியாது. அதன் காரணமாக ஹர்பஜன் சிங்கை கழற்றி விட்ட தோனி அவருக்கு முழுமையான வாய்ப்புகளை வழங்கினார். அதைப் பயன்படுத்திய அஸ்வின் இந்தியாவுக்காக 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக சாதனைப் படைத்துள்ளார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் அறிமுகமான போது இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இருந்ததால் உங்களுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்று பலரும் சொன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். அப்போது முரளிதரனை முந்தி சிஎஸ்கே அணியின் முதன்மை ஸ்பின்னராக வருவேன் என்று சொன்னதை நாளடைவில் நிரூபித்ததாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

நிரூபித்த அஸ்வின்:

“எனது கேரியரின் தொடக்கத்தில் நான் இவ்வளவு சாதிப்பேன் என்று யாராவது தெரிவித்திருந்தால் ஆச்சரியப்பட்டிருப்பேன். நீங்கள் பெரிதாக வர முயற்சிக்கும் போது உலகம் அதை எதிர்க்கும். குறிப்பாக அஸ்வின் ஒரு மிகையான சிந்தனையாளர், அதிக லட்சியம் கொண்டவர், கையுறையில் பொருந்த முடியாதளவுக்கு பெரியவர் என்பது போன்ற விஷயங்களை பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்பேன்”

இதையும் படிங்க: இம்ரான் கானுக்கு அப்றம் தோனி தான்.. தனியாளாக ஆவரேஜ் அணியை வெச்சே சாதிச்ச கேப்டன்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

“சிஎஸ்கே அணியில் நான் விளையாடத் துவங்கிய போது கூட முத்தையா முரளிதரன் முதன்மை ஆஃப் ஸ்பின்னராக இருந்தார். அவர் இருந்ததால் 2 ஆஃப் ஸ்பின்னர்கள் விளையாட வாய்ப்பில்லை என்று பலரும் என்னிடம் சொன்னார்கள். அப்படி சொல்லும் மக்களை தவறு என்று நான் நிரூபிக்க முயற்சித்தேன். குறிப்பாக சிஎஸ்கே அணியை நான் 2 ஆஃப் ஸ்பின்னர்களை விளையாட வைக்கிறேன், அதற்காக முரளிதரனை முந்தி நான் விளையாடுவேன் என்றும் அவர்களிடம் சொன்னேன். அது முரளிதரனை குறைவாக பேசுவது கிடையாது. அவருடைய அளவுக்கு என்னால் வர முடியும் என்ற நம்பிக்கையைப் பற்றியது” எனக் கூறினார்.

Advertisement