இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையின் நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடப் போகும் அவர் 2027 உலகக் கோப்பையில் விளையாடி விடை பெற திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் அப்போது 39, 40 வயதில் அவர்களால் நல்ல ஃபார்மில் விளையாட முடியுமா? என்பது கேள்விக்குறியாகும்.
எனவே வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் அவர்களை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் சுப்மன் கில் தலைமையில் 2027 உலகக் கோப்பையில் புதிய அணியை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதை பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா மறுத்திருந்தார்.
இந்தியா ஏ அணிக்காக:
இதற்கிடையே 2027 உலகக் கோப்பையில் விளையாட விராட், ரோஹித் உள்ளூரில் தொடர்ந்து விளையாடி தங்களை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று இர்பான் பதான் முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வரும் செப்டம்பர் 16, 23 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு இந்தியா ஏ அணி 2 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அத்தொடரில் விளையாட ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த போட்டிகள் முடிந்ததும் வரும் செப்டம்பர் 30, அக்டோபர் 3, 5 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக கான்பூரில் இந்தியா ஏ அணி 3 உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்தப் போட்டிகளில் விராட், ரோஹித் விரும்பினால் விளையாடலாம் என்று இசிசி அறிவித்துள்ளது. இது பற்றி பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு.
பிசிசிஐ அறிவிப்பு:
“அவர்கள் இந்தியா ஏ அணிக்காக விளையாடுவதற்கு அதிக வாய்ப்பில்லை. ஆனால் அது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு முன்பாக போட்டி நேரத்தை விரும்பினால் அவர்கள் உள்ளூரில் 1 அல்லது 2 போட்டிகளில் விளையாடலாம். இதுவரை எதுவும் முடிவு செய்யப்படவில்லை. அதே சமயம் ஃபிட்டாக இருக்கும் அவர்கள் ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாக தயாராக உள்ளனர்”
இதையும் படிங்க: பிளமிங்கை வீழ்த்தி பிரேவிஸை பறித்த தாதா.. வரலாறு காணாத தொகைக்கு வாங்கியது ஏன்? கங்குலி பேட்டி
“விரைவில் இந்தியா ஏ, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம், இராணி கோப்பை தொடர்களுக்கான அணி அறிவிக்கப்பட உள்ளது. நம்முடைய வீரர்கள் அனைவருமே வருடத்திற்கு இருமுறை ஃபிட்னஸ் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். சமீபத்தில் அந்த சோதனைகளில் விராட், ரோஹித் கலந்து கொண்டனர்” என்று கூறினார். இதிலிருந்து ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு முன் தங்களை ஃபிட்னஸை நிரூபிப்பதற்காகவே விராட், ரோஹித் இந்தியா ஏ அணிக்காக விளையாட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



