கோலி கலெக்‌ஷனில் காஸ்ட்லி கனவு கார் இதுதான் !

Kohli
- Advertisement -

இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும் தற்போதைய கேப்டனுமான விராட்கோலி தனக்கு பிடித்த விசயங்களுக்காக எவ்வளவு கோடி பணத்தையும் தண்ணி போல செலவு செய்ய தயங்காதவர்.
தான் கிரிக்கெட் விளையாடி சம்பாதித்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வருகின்றார்.

இவர் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே விலையுயர்ந்த பிராண்டட்டாக மட்டுமே இருக்கும்.
கார் பிரியரான விராட்கோலி ஏற்கனவே பல விலையுயர்ந்த கார்களை கலெக்ட் செய்து வைத்திருந்தாலும், புதிதாக வெளிவரும் ஒரு கார் தனக்கு பிடித்துவிட்டால் அது எவ்வளவு கோடியாக இருந்தாலும் அதை தனக்கு சொந்தமாக்கி அழகு பார்ப்பவர்.

- Advertisement -

அப்படி சமீபத்தில் விராட்கோலி வாங்கியுள்ள கார் மற்றும் அதன் விலை என்ன தெரியுமா!
தற்போது அவரது கார் கலெக்சன் வரிசையில் இடம்பெற்றுள்ள விலையுயர்ந்த மற்றொரு ஆடம்பர கார் பெனட்லி கான்டினென்ட்டல் ஜிடி. இந்த ரக கார்களின் விலை 3 முதல் 4.5 கோடி ரூபாய்.

தன்னுடைய திருமணத்திற்கு பின் விராட்கோலி வாங்கியுள்ள ஆடம்பர கார் இதுதான். ஆனாலும் இந்த காரை தனது பெயரில் பதிவுசெய்யாமல் தனது தம்பியின் பெயரில் பதிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கிரிக்கெட் உலகில் இவருக்கு முன்னர் இதே ரக விலையுயர்ந்த கார்களை யுவராஜ்சிங் மற்றும் சேவாக் ஆகியோர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.அவர்களுக்கு அடுத்தபடியாக தற்போது விராட்கோலியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

Advertisement