Virat Kohli : ஆரஞ்சு நிறம் ஒரு ஸ்மார்ட் கிட். ஆனால் நீலநிற ஜெர்ஸி தான் நமக்கு எல்லாமே – கோலி நெகிழ்ச்சி

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி

Kohli
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி 11 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

Jersy

- Advertisement -

அடுத்ததாக இந்திய அணி வரும் 30ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது 2 அணிகளுக்குமே இந்த போட்டியை முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று கருதப்படும் இந்த இரண்டு அணியும் மோதுவதால் இந்த போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அறிமுகப்படுத்தி அதன் விழாவில் பேசிய விராட் கோலி கூறியதாவது : இந்த சீருடை எனக்கு பிடித்திருக்கிறது இதன் வண்ணம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஒருநாள் போட்டிக்கு இந்த மாற்றம் சிறப்பான ஒன்றாகும். ஆனால் இந்த ஜெர்ஸி நிரந்தரமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

Shami

நீல நிறம் தான் எப்பொழுதும் நம்முடைய நிறம். நீல நிறத்தில் ஜெர்ஸி அணியும் போது ஒவ்வொரு முறையும் பெருமையாக இருக்கும். இந்த ஆரஞ்சு நிறம் உலக கோப்பையை பொருத்தவரை ஒரு ஸ்மார்ட் கிட். இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் இந்த புது ஆரஞ்சு நிற ஜெர்ஸி அணிந்து கொண்டு விளையாட உள்ளோம் என்று கோலி கூறினார்.

Advertisement