Virat Kohli : சச்சினுக்கு அடுத்து கோலிக்கு லண்டனில் கிடைத்த கவுரவம் – விவரம் இதோ

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

Kohli
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup 1

- Advertisement -

இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து மைதானமான லார்ட்ஸில் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலிக்கு மெழுகுச்சிலையில் உருவம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருவதால் அவரை கவுரவிக்கும் விதமாக முழுகுசிலை வைக்கப்பட்டுள்ளது.

Kohli 1

இதற்கு முன்னர் இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு மட்டுமே முழுகுசிலை லண்டனில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து லண்டனில் மெழுகுசிலை வைக்கப்பட்ட இந்திய வீரர் என்ற சிறப்பினை கோலி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement