எந்தவொரு சிறிய தப்பு பண்ணாலும் ஓட்டுமொத்த டீமும் இல்ல தொடரும் பாழாகிடும் – கோலி விடுத்த எச்சரிக்கை

- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கும் இந்த தொடர் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 (துபாய், ஷார்ஜா, அபுதாபி) மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள. இந்த 3 மைதானங்களிலேயே மொத்தம் 60 போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dubai

- Advertisement -

உலகம் முழுவதும் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஐபிஎல் தொடர்ருக்கான கடும் கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவை வீரர்களும், நிர்வாகிகளும் கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று அடைந்து விட்டன. அணி வீரர்கள் தங்கள் ஓட்டல்களிலும், ரிசார்ட்களிலும் ஆறு நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு பிறகு ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் கடைபிடிக்கும் கடுமையான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி நேற்று தங்களது அணி வீரர்களுடன் இணைந்தார். அப்போது கேப்டன் கோலி மற்றும் இயக்குனர் மைக் ஹெசன் ஆகியோர் அணி வீரர்களுக்கான நெறிமுறைகளை பின்பற்றுவதில் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

rcb 1

அப்போது கோலி யாராவது விதிமுறைகளை மீறுகிறீர்களா என அனைவரிடமும் கேட்டார். பிசிசிஐ எழுதியுள்ள ஒரு ஆவணம் நம்மிடம் உள்ளது. அது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் அந்த விதி முறைகளை நாம் பின்பற்றவில்லை எனில் மொத்த ஒட்டுமொத்த அணியும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படும். இதனால் தொடரின் முக்கிய நேரத்தில் நமக்கு நெருக்கடி ஏற்படும். தயவுசெய்து அத்தகைய எந்த தவறையும் செய்ய வேண்டாம் என்றும் நமது அணியை நெருக்கடிக்குள் நாமே தள்ளி விட வேண்டாம் என்றும் அணி வீரர்களை கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய கோலி யாராவது விதிமுறையை மீறினால் அது மொத்த அணியையும் தண்டிக்கும். அதுமட்டுமின்றி போட்டியின் முக்கிய கட்டத்தில் இருந்து நாம் வெளியேற்றப்பட வாய்ப்பும் உள்ளது. எனவே என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கின்றதோ அதை அனைத்தையும் நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வளையம் என்பதில் நாம் அனைவரும் ஒரே சிந்தனையுடன் செயல்படுவோம் என்று எதிர்பார்க்கிறேன். எந்த நேரத்திலும் இதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

rcb 2

மேலும் இந்த விடயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எனவே வீரர்கள் கண்டிப்பாக கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் ஏனென்றால் நாம் ஒருவர் செய்யும் தவறால் இந்த மொத்த தொடரும் பாழாகிவிட வாய்ப்புள்ளது எனவே அனைவரும் கட்டுப்பாடுகளை மதித்து சரியாக நடந்து கொள்ளும்படியும் கோலி கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement