ஐ.பி.எல் தொடரில் கேப்டன்களுக்கு இந்த சலுகையும் கொடுக்க வேண்டும் – விராட் கோலி கோரிக்கை

Kohli-1

தொழில்நுட்பத்தின் மூலம் அம்பயர்கள் செய்யும் தவறு அப்படியே தெரிந்துவிடுகிறது. இது மனித இயல்பு என்றாலும் இன்னும் அந்த தவறை குறைத்து கொள்ளவேண்டும். நடுவர்கள் பயிற்சி பெற்றவர்கள், மிக எளிதில் இதையெல்லாம் கணிக்க வேண்டும் என்ற ஒரு குரலும் இருந்து வருகிறது. ஐபிஎல் தொடரிலும் இப்படி பல சர்ச்சைகள் தற்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

Dhoni-umpire

சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் இடையேயான போட்டி சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது 19ஆவது ஓவரை சென்னை வீரர் ஷர்துல் தாகூர் வீசினார். இந்தப் பந்தை வொய்டு என அறிவிக்க அம்பயர் கையை உயர்த்து சென்றார். அப்போது தோனி அவரை முறைத்து பார்க்க உடனடியாக கையை கீழே போட்டு விட்டார்.

ஆனால் உண்மையில் அந்த பந்து சரியான பந்து தான் ஒரு வேளை வொய்டு கொடுத்திருந்தால் சென்னை அணிக்கு அது பெரும் பிரச்சனையாக முடிந்திருக்கும். இந்நிலையில் இதுபோன்ற நிகழ்வுகளின்போது கேப்டன்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்..

wide

வைடு அல்லது இடுப்புக்கு மேலே வரும் ஃபுல் டாஸ் நோ பால் போன்ற பந்துகள் வீசப்படும் போது நடுவரின் முடிவினை எதிர்த்து கேப்டன்கள் முறையீடும் வாய்ப்பைத் தர வேண்டும்.ஐபிஎல் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர்களில் இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் பெரிய பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

Kohli

ஒரு ரன்னில் தோற்று கோப்பையை கைவிட்ட கதையும் இருக்கிறது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் விராட் கோலி.