இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியானது ஏப்ரல் 27-ஆம் தேதியான இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
விராட் கோலி நிகழ்த்த காத்திருக்கும் வரலாற்று சாதனை :
இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டி டெல்லி அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பாக விளையாடும் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஒரு மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். இந்த 2026 ஐபிஎல் தொடரை பொறுத்தவரை அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இதுவரை 7 போட்டியிலே விளையாடி 328 ரன்களை குறித்துள்ளார்.
இவ்வேளையில் இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் மேலும் 11 ரன்களை குவிக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் போட்டிகளில் 9000 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக முதலிடத்தில் இருக்கும் விராட் கோலி ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : இந்த சீசன் அவ்ளோதானா? தோனிக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவலை பகிர்ந்த ஸ்டீபன் பிளமிங் – விவரம் இதோ
இவ்வேளையில் ஐ.பி.எல் போட்டிகளில் 9000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். கடைசியாக அவர் விளையாடிய போட்டியில் 41 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்த நிலையில் அந்த பார்மை இன்றைய போட்டியிலும் கொண்டு வருவார் என்பதனால் நிச்சயம் இன்றைய போட்டியில் அவர் 11 ரன்களை அடித்து 9000 ரன்களை பூர்த்தி செய்வார் என்பது உறுதி.



