ராகுல் டிராவிடின் மிகப்பெரிய சாதனையை 3 ஆவது போட்டியில் முறியடிக்க காத்திருக்கும் – விராட் கோலி

Dravid
- Advertisement -

ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து 11-ஆம் தேதி நாளை துவங்கவுள்ள இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை மீண்டும் ஒருமுறை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும். விராட் கோலி தலைமையில் தற்போது இரண்டாவது முறையாக தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் வந்துள்ள இந்திய அணி இம்முறை நிச்சயம் இந்த சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsRSA

- Advertisement -

இந்த தொடரின் இரண்டாவது போட்டியின்போது முதுகுவலி காரணமாக அந்த போட்டியை தவற விட்ட கோலி தற்போது மூன்றாவது போட்டியில் அணியில் இணைந்துள்ளார். முதல் போட்டியில் இந்திய அணி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதால் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாரா விதமாக இரண்டாவது போட்டியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

இதன் காரணமாக இந்த மூன்றாவது போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக மாறி உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் ஒரு முக்கியமான சாதனையை தென்னாப்பிரிக்க மண்ணில் வைத்து முறியடிக்க காத்திருக்கிறார். அதன்படி தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் திகழ்கிறார். சச்சின் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1161 ரன்களை குவித்துள்ளார்.

Dravid 1

அவருக்கு அடுத்த இடத்தில் டிராவிட் 624 ரன்களுடன் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி 611 ரன்களுடன் இருக்கிறார். இதன் காரணமாக நாளை துவங்க உள்ள இந்த மூன்றாவது போட்டியில் மேலும் 14 ரன்கள் அடிப்பதன் மூலம் டிராவிட்டின் இந்த சாதனையை கடந்து தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்திற்கு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : எல்லாமே ஆரம்பிச்சது இங்கதான். அதுக்குள்ள 4 வருஷம் ஆயிடுச்சி – பும்ரா பகிர்ந்த உருக்கமான பதிவு

அதோடு மட்டுமின்றி ஒருவேளை இந்திய அணி இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுமாயின் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய கேப்டன் என்ற சாதனையும் விராட் கோலி படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement