எல்லாமே ஆரம்பிச்சது இங்கதான். அதுக்குள்ள 4 வருஷம் ஆயிடுச்சி – பும்ரா பகிர்ந்த உருக்கமான பதிவு

Bumrah
Advertisement

கடந்த வாரம் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து கேப்டவுன் நகரில் நாளை இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அறிமுகமானது குறித்து நெகிழ்ச்சியான ஒரு கருத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

bumrah 2

சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே மைதானத்தில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அறிமுகமான பும்ரா தற்போது முன்னணி பவுலராக திகழ்ந்து வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அட்டகாசமான வெளிப்படுத்திய பும்ரா முதல் முறையாக கேப்டன்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

அதில் இருந்து தற்போது வரை அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் நான்கு ஆண்டுகள் கழித்து கேப்டவுன் நகரில் விளையாட இருப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டதாவது : 2018ஆம் ஆண்டு கேப்டவுன் நகரில் தான் என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் ஆரம்பமானது.

இந்த நான்கு வருடத்தில் ஒரு வீரராகவும், ஒரு தனிநபராகவும் நான் நன்கு முதிர்ச்சி அடைந்துள்ளேன். இங்கு வந்து விளையாடுவது என்னுடைய பழைய ஞாபகத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இது மிகவும் ஸ்பெஷலான தருணம் என பும்ரா பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : கடைசி போட்டியில் களமிறங்கிய ராஸ் டெய்லர். ரசிகர்கள் மற்றும் வங்கதேச வீரர்கள் கொடுத்த மரியாதை

ஏற்கனவே பும்ராவின் தேர்வு குறித்து பேசியிருந்த முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி : இந்தியாவில் நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டிகளில் அவரை விளையாட வைக்க வேண்டாம் என்றும் தென் ஆப்ரிக்க தொடரில் தான் பும்ராவை அறிமுகம் செய்ய வேண்டும் என்று தான் நிர்வாகத்திடமும், கேப்டன் கோலியிடமும் கோரிக்கை வைத்து அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்ததாக ரவி சாஸ்திரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement