இன்னும் 2 சிக்ஸர்கள் தான் தேவை.. யுவ்ராஜ் சிங்கை பின்னுக்கு தள்ளி விராட் கோலி – நிகழ்த்தப்போகும் சாதனை

Kohli and Yuvraj
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விட்டதால் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். தற்போது 36 வயதான விராட் கோலி 303 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 51 சதம் மற்றும் 74 அரைசதம் என 14,181 ரன்கள் குவித்துள்ளார்.

யுவ்ராஜ் சிங்கை முந்த காத்திருக்கும் விராட் கோலி :

ஆஸ்திரேலிய மண்ணில் தற்போது நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் அவர் முதலாவது போட்டியின் போது 8 பந்துகளை சந்தித்த நிலையில் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதனால் அவர் தற்போது அடிலெய்டு மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அடுத்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் அவர் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங்கின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தில் ஈர்த்துள்ளது.

அந்த வகையில் விராட் கோலி நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரராக யுவ்ராஜ் சிங் 153 சிக்சர்களுடன் தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக 301 நாள் போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங் 153 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து தற்போது ஆறாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி 303 போட்டிகளில் விளையாடி 152 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் இரண்டாவது போட்டியில் மேலும் அவர் 2 சிக்ஸர்களை அடித்தால் 154 சிக்ஸர்களுடன் இந்திய வீரராக அதிக சிக்சர்களை ஒருநாள் போட்டியில் அடித்த வீரர் என்ற பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடிப்பார்.

இதையும் படிங்க : இன்னும் 46 ரன்கள் தேவை.. சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஹிட் மேன் – விவரம் இதோ

இந்த பட்டியலில் முதலிடத்தில் ரோகித் சர்மா 344 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், மகேந்திர சிங் தோனி 222 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 195 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும், சவுரவ் கங்குலி 189 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement