இன்னும் 46 ரன்கள் தேவை.. சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஹிட் மேன் – விவரம் இதோ

Rohit and Ganguly
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்த ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர் முழுநேர பேட்ஸ்மனாக விளையாடி வரும் வேளையில் இந்த ஆஸ்திரேலியா தொடரானது ரோகித் சர்மாவிற்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.

சவுரவ் கங்குலியை முந்த காத்திருக்கும் ரோஹித் சர்மா :

இதன் காரணமாக இந்த ஆஸ்திரேலியா தொடரில் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியின் போது 8 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்த அவர் அடுத்த இரண்டாவது போட்டியிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது அடிலெய்டு மைதானத்தில் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அடுத்த இரண்டாவது போட்டியில் விளையாட இருக்கும் ரோகித் சர்மா முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பில் உள்ளார். அந்த வகையில் ரோகித் சர்மா நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :

இந்திய அணிக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 சதம் மற்றும் 58 அரைசதம் என 11,176 ரன்கள் குவித்து இந்திய அணி சார்பாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக நான்காவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த இரண்டாவது போட்டியில் அவர் மேலும் 46 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அதிக ரன்களை ஒருநாள் போட்டிகளில் அடித்த வீரராக மூன்றாவது இடத்தில் இருக்கும் சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளி அந்த மூன்றாவது இடத்தை பிடிப்பார். சவுரவ் கங்குலி கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 308 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதம் மற்றும் 71 அரைசதம் என 11,221 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க : இரண்டாவது ஒருநாள் போட்டியில் அணிக்குள் வரும் குல்தீப் யாதவ்.. வெளியேறப்போகும் வீரர் யார்? – விவரம் இதோ

அவரது இந்த சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவிற்கு 46 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் நிச்சயம் அடுத்த போட்டியில் அந்த சாதனையை அவர் நிகழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி சார்பாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 18,000-திற்கும் மேற்பட்ட ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 14,000-திற்கும் மேற்பட்ட ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement