இரண்டாவது ஒருநாள் போட்டியில் அணிக்குள் வரும் குல்தீப் யாதவ்.. வெளியேறப்போகும் வீரர் யார்? – விவரம் இதோ

Kuldeep Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.

இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் விளையாட வாய்ப்பு :

இதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலிய அணி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை அக்டோபர் 23-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது.

ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் ஆஸ்திரேலிய ஆடுகளங்களிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்று நம்பப்படுவதாலும் பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை கணிக்க தடுமாறுவார்கள் என்பதாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படி குல்தீப் யாதவ் அணிக்குள் வரும் பட்சத்தில் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது. ஏனெனில் சமீப காலமாகவே கெளதம் கம்பீரின் ஆதரவோடு விளையாடுபவர் என்று பெயரெடுத்து வரும் ஹர்ஷித் ராணா முதலாவது ஒருநாள் போட்டியின் போதும் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனாலும் அவரது பந்துவீச்சில் பெரியளவில் தாக்கம் வெளிப்படவில்லை.

இதையும் படிங்க : வலைப்பயிற்சியில் ஏற்பட்ட மாற்றம்.. ரோஹித் சர்மாவின் இடத்திற்கு காத்திருக்கும் ஆபத்து – விவரம் இதோ

இதன் காரணமாக அவர் பிளேயிங் லெவனில் இருந்து ஓரங்கட்டப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் கொண்டுவரப்படுவார் என்று தெரிகிறது. அதேவேளையில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோருடன் சேர்ந்து மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டர் நிதீஷ் ரெட்டி செயல்படுவார் என்றும் தெரிகிறது.

Advertisement