ஸ்டீவ் ஸ்மித்தின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி – ஆனால் பேட்டிங்கில் இல்லை

Smith-and-Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதோடு தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் அவர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டு வகையான வடிவங்களில் தொடர்ந்து விளையாடி வருகிறார். பேட்டிங்கில் ஏகப்பட்ட சாதனைகளை முறியடித்துள்ள விராட் கோலி இன்னும் சாதனைகளை படைத்தாலும் பீல்டிங்கில் அவர் எந்த அளவு சிறப்பான வீரர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஸ்மித்தின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி :

களத்தில் தனது ஆக்ரோஷமான செயல்பாடுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விராட் கோலி 36 வயதில் இன்றளவும் மிகச் சிறப்பான செயல்பாட்டை பீல்டிங்கில் வெளிப்படுத்தி வருவது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் இவரது பீல்டிங் அற்புதமாக இருந்து வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வரும் வேளையில் இந்த போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலியா அணி ஆட்டநேர முடிவில்:

7 விக்கெட்டுகளை இழந்து 405 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் மெக்ஸ்வீனி, லாபுஷேன் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோரது கேட்ச்களை சேர்த்து மூன்று கேட்ச்களை பிடித்துள்ள கோல சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் மிகப்பெரிய சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதாவது இன்று அவர் பிடித்த மூன்று கேட்ச்களுடன் சேர்த்து இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 70 கேட்ச்களை பிடித்துள்ளார்.

- Advertisement -

இப்படி ஒரு அணிக்கு எதிராக அதிக கேட்ச்களை பிடித்த வீரராக முதலிடத்தில் ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்து அணிக்கு எதிராக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 76 கேட்சுகளை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து ஜெயவர்த்தனே இங்கிலாந்து அணிக்கெதிராக 72 கேட்ச்களை பிடித்துள்ளார். அதன் பின்னர் நான்காவது வீரராக விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 70 கேட்ச்களை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : நேரலையில் வஞ்சப்புகழ்ச்சி.. ஜஸ்ப்ரித் பும்ராவை திட்டி விட்டு சமாளித்த இஷா.. ரசிகர்கள் விளாசல்

இன்னும் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மேலும் 7 கேட்ச்களை விராட் கோலி பிடித்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 77 கேட்ச்களை பிடித்து ஒரு அணிக்கு எதிராக அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்திற்கு வர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement