காபா மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 14ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் முடிவில் 405-7 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 152, டிராவிஸ் ஹெட் 101 ரன்கள் எடுத்து நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக இதுவரை 5* விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இத்தொடரின் முதல் போட்டியில் அவருடைய தலைமையில் அபார வெற்றி பெற்ற இந்தியா இரண்டாவது போட்டியில் ரோகித் தலைமையில் மோசமாக தோற்றது. அந்த வரிசையில் இந்தப் போட்டியிலும் ரோகித் தலைமையில் இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறுகிறது. அதனால் இந்தப் போட்டியில் மழை வராமல் போனால் இந்தியா வெல்வது கடினம் என்று ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
நேரலையில் வஞ்சப்புகழ்ச்சி:
முன்னதாக இப்போட்டியில் சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா உள்ளிட்ட மற்ற இந்திய பவுலர்கள் திணறலாக பந்து வீசினார்கள். ஆனால் இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 5* விக்கெட்டுகளை எடுத்து மீண்டும் வெற்றிக்கு போராடி வருகிறார். அவருடைய ஆட்டத்தை முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் பிரட் லீ ஃபாக்ஸ் கிரிக்கெட் தொலைக்காட்சியின் நேரலை வர்ணணையில் பாராட்டினார்.
குறிப்பாக கவாஜா, மெக்ஸ்வீனி ஆகிய ஆஸ்திரேலிய துவக்க வீரர்களின் விக்கெட்டுகளை பும்ரா எடுத்திருந்த போது அவர் பாராட்டியது பின்வருமாறு. “பும்ரா இன்று 5 ஓவரில் 4 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இது போன்ற ஆட்டத்தை தான் உங்களுடைய முன்னாள் இந்திய கேப்டனிடம் இருந்து நீங்கள் விரும்புவீர்கள்” என்று கூறினார். அதற்கு அருகிலிருந்த முன்னாள் இங்கிலாந்து வீராங்கனை இஷா குஹா பதிலளித்தது பின்வருமாறு.
ரசிகர்கள் விளாசல்:
“வெல். அவர் எம்விபி அல்லவா? மோஸ்ட் வேல்யூபல் பிரிமேட் ஜஸ்ப்ரித் பும்ரா” என்று கூறினார். அதாவது “எம்விபி” என்றால் அதிக மதிப்புடைய வீரர் என்பது அர்த்தமாகும். “பிரிமேட்” என்பது ஒரு வகையான குரங்கு இனத்தின் பெயராகும். அந்த வகையில் “ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் மதிப்புடைய குரங்கு” என்று இஷா குஹா வஞ்சப்புகழ்ச்சி அணியை போல நேரலையில் திட்டுவது போல் திட்டி சமாளித்தார்.
இதையும் படிங்க: பாவங்க பும்ரா.. அவங்களயும் குறை சொல்ல முடியாது.. இந்தியாவின் கணக்கு மிஸ்ஸாக இதான் காரணம்.. மோர்கல்
அதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் நேரலையில் வார்த்தைகளை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பது தெரியாமல் எப்படி வர்ணனையாளராக இருக்கிறீர்கள்? என்று அவரை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விளாசி வருகிறார்கள். மேலும் கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட நீங்கள் இந்தியாவின் பும்ராவை இப்படித் தான் பாராட்டுவீர்களா? என்றும் இஷா குஹாவை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.



