ராகுல் டிராவிடின் மிகப்பெரிய சாதனையை தகர்க்க விராட் கோலிக்கு கிடைத்திருக்கும் – அற்புதமான வாய்ப்பு

Dravid
Advertisement

இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்ததற்கு பின்னர் 1021 நாட்களுக்குப் பிறகு தனது 71-வது சதத்தை அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அடித்தார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ள விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அசத்தலாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Virat Kohli

அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று துவங்க உள்ள நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி ராகுல் டிராவிட்டின் மிகப்பெரிய சாதனையை தகர்க்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.

- Advertisement -

அதன்படி இதுவரை இந்திய வீரர்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்கள் உடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அடுத்த இடத்தில் ராகுல் டிராவிட் 24,208 ரன்கள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விராட் கோலி 24,002 ரன்கள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் வேளையில் இன்னும் அவர் 207 ரன்களை இந்த தொடரில் குவிக்கும் பட்சத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலும், அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தையும் பிடிக்க அருமையான வாய்ப்பு காத்திருக்கிறது.

- Advertisement -

இந்த சாதனையை விராட் கோலி இந்த தொடரில் நிகழ்த்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதோடு அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 71 சதங்களுடன் ரிக்கி பாண்டிங்கை சமன் செய்திருக்கும் கோலி மெல்ல மெல்ல சச்சினின் சாதனையை நெருங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே மாதிரியான பெயருடைய வீரர்களின் எண்ணிக்கை பட்டியல் – முற்றிலும் மாறுபட்ட பதிவு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று செப்டம்பர் 20 ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement