சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே மாதிரியான பெயருடைய வீரர்களின் எண்ணிக்கை பட்டியல் – முற்றிலும் மாறுபட்ட பதிவு

Axar Patel and Hardik Patel
- Advertisement -

கிரிக்கெட்டில் விளையாடும் அத்தனை வீரர்களும் சர்வதேச அரங்கில் தங்களது நாட்டுக்காக பெரிய அளவில் சாதித்து பெரிய பெயரெடுத்து தங்களது குடும்பத்திற்கும் அன்னை தந்தைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடுவார்கள். அவ்வாறு களமிறங்கும் பெரும்பாலான வீரர்களில் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே சவாலையும் காயங்களையும் விமர்சனங்களையும் கடந்து ஏராளமான வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்க முடியும். அப்படி உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் அணிகளுக்காக ஏராளமான வீரர்கள் விளையாடினாலும் சில பெயர்கள் மட்டுமே ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கும்.

Sachin 1

- Advertisement -

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அத்தனை வீரர்களின் பெயரையும் நினைவில் வைத்துக் கொள்வது கடினம் என்றாலும் ஒரு போட்டியில் விளையாடினால் கூட வரலாற்று புத்தகத்தில் அவர்களது பெயர் இடம் பிடித்து விடும். மேலும் நமது அன்றாட வாழ்வில் ஒருசில பெயர்கள் பொதுவாக நிறைய மனிதர்களின் ஒரு பகுதியாக இருப்பதை போல் கிரிக்கெட் வீரர்களின் பெயரிலும் ஒருசில வார்த்தைகள் பொதுவானதாக பெரும்பாலான வீரர்களின் பெயர்களி இடம் பெறும். அந்த வகையில் 145 வருட சர்வதேச ஆடவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே மாதிரியான பெயரில் விளையாடிய அதிகபட்ச வீரர்களின் எண்ணிக்கையை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்:

10. இஸ்லாம்: சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 21 வீரர்களின் பெயரில் இந்த வார்த்தை பொதுவாக இருந்துள்ளது. அதிலும் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மட்டும் 17 வீரர்களுடைய பெயரில் இந்த வார்த்தை ஒரு அங்கமாக இருக்கிறது. அவர்களில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 38 டெஸ்ட் போட்டிகளில் 158 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Sangakkara

9. குமார்: இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இந்த பெயருடன் 21 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். இந்தப் பெயரை ரசிகர்கள் நினைக்கும் போதே குமார் சங்ககாரா, புவனேஸ்வர் குமார், பிரவீன் குமார் போன்றவர்களின் பெயர்கள் முன்னாடி வந்து போகும்.

- Advertisement -

8. டெய்லர்: ஆசியக் கண்டத்திற்கு வெளியே உள்ள நாடுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இந்த பெயரில் 23 வீரர்கள் சர்வதேச அளவில் விளையாடியுள்ளனர். அதிலும் நியூசிலாந்து ஜாம்பவான் ராஸ் டெய்லர் ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர் ஆகியோர் அதிகபட்சமாக தலா 10000 மேற்பட்ட ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் அடித்துள்ளனர்.

Taylor

7. சில்வா: இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்த பெயருடன் விளையாடிய 20 வீரர்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் சில்வா என்ற பெயருடன் 24 வீரர்கள் விளையாடியுள்ளனர். அதில் 17 வீரர்களின் இந்தப் பெயருக்கு முன்பாக “டீ” என்ற வார்த்தையும் உள்ளது. இந்த பெயரை கேட்டதும் இலங்கை ஜாம்பவான் அரவிந்த டீ சில்வா நிச்சயமாக ரசிகர்களின் நினைவுக்கு வருவார்.

- Advertisement -

6. ஸ்மித்: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான இந்த பெயரில் உலகம் முழுவதிலும் இதுவரை 43 வீரர்கள் விளையாடியுள்ளனர். அதில் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் கிரேம் ஸ்மித் மற்றும் தற்போது ஆஸ்திரேலிய நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ரசிகர்களின் நினைவுகளில் தங்களது பெயரை ஆழமாக பதித்துள்ளனர்.

5. படேல்: இந்தியாவின் மேற்கு பகுதிகளில் மிகவும் பிரபலமான இந்த பெயருடன் சர்வதேச கிரிக்கெட்டில் 48 வீரர்கள் விளையாடியுள்ளனர். ஆச்சரியப்படும் வகையில் அதில் 9 வீரர்கள் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர். எஞ்சிய வீரர்கள் நியூசிலாந்து, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்காக விளையாடியுள்ளனர். அதில் நினைவு கொள்ளும் வகையில் இந்தியாவின் முனாஃப் பட்டேல், அக்சர் பட்டேல் நியூசிலாந்தின் 10 விக்கெட்டுகள் எடுத்த நட்சத்திரம் அஜஸ் படேல் ஆகியோரைக் கூறலாம்.

- Advertisement -

4. சிங்: பஞ்சாப் மாநிலத்தை மையமாகக் கொண்ட இந்த பெயருடன் சர்வதேச கிரிக்கெட்டில் 64 வீரர்கள் விளையாடியுள்ளனர். அதில் 19 பேர் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். எஞ்சிய வீரர்கள் உலகின் இதர அணிகளுக்காக விளையாடினாலும் ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் யாராலும் மறக்க முடியாத பெயர்களாகும்.

yuvraj 2

3. அலி: ஆசிய கண்டத்தில் நிறைய வீரர்களின் பெயரில் ஒரு அங்கத்தை பிடித்துள்ள இந்தப் பெயருடன் சர்வதேச கிரிக்கெட்டில் 67 வீரர்கள் விளையாடியுள்ளனர். அதில் மொயின் அலி ரசிகர்களிடம் மிகவும் புகழ் பெற்றவராக உள்ளார்.

2. அஹமத்/அஹமது: இந்த ஒரே உச்சரிப்புடன் கூடிய வார்த்தையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் 76 வீரர்கள் விளையாடியுள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து மட்டும் 19 வீரர்கள் விளையாடியுள்ளனர். எடுத்துக்காட்டாக 2017 சாம்பியன்ஸ் டிராபியை சப்ராஸ் அகமதை கூறலாம்.

Zaheer-Khan

1. கான்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 32 நாடுகளுக்காக 89 வீரர்கள் இந்த பெயருடன் விளையாடியுள்ளனர். அதில் அதிகபட்சமாக பாகிஸ்தானுக்காக மட்டும் 28 வீரர்கள் விளையாடியுள்ளனர். அதில் 1992 உலகக்கோப்பையை வென்று பிரதமராக உயர்ந்த இம்ரான் கான், இந்தியாவின் ஜாஹிர் கான், ஆப்கானிஸ்தானின் லேட்டஸ்ட் நாயகன் ரஷித் கான் ஆகியோரை எடுத்துக்காட்டாக கூறலாம்.

Advertisement