இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2019-ஆம் ஆண்டிற்கு பிறகு சதம் அடிக்காமல் தவித்து வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இழந்த தனது பார்மை விராட் கோலி அற்புதமாக மீட்டெடுத்து விட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்றளவும் அவரது பார்மை மீட்க கடுமையாக போராடி வருகிறார். குறிப்பாக 55 ரன்கள் சராசரியை வைத்திருந்த அவரது சராசரி தற்போது 48 ரன்கள் வரை சரிந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சுழற்ப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி ரன்களை குவித்து வந்த விராட் கோலி தற்போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் அவர் மூன்று முறை அனுபவமற்ற சுழற்பந்து வீச்சாளர்களிடம் ஆட்டம் இழந்து வெளியேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரில் டெல்லி போட்டியின் போது ஓரளவு சிறப்பாக விளையாடிய அவர் அதனை தவிர்த்து பெரிய அளவில் ரன்களை சேர்க்கவில்லை.
அதோடு கடைசியாக அவர் விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்காததால் அவர் மீது சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் மார்ச் 9-ஆம் தேதி இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடிவரும் கோலி இந்த போட்டியில் இன்னும் 42 ரன்கள் குவித்தால் முன்னாள் ஜாம்பவான்கள் டிராவிட் மற்றும் கவாஸ்கர் ஆகியோரை பின்னுக்கு தள்ளி புதிய உலக சாதனை படைக்க உள்ளார்.

அந்த வகையில் இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 3958 ரன்களை குவித்துள்ள அவர் இன்னும் 42 ரன்கள் எடுத்தால் இந்திய மண்ணில் 4000 டெஸ்ட் ரன்களை அடிக்கும் ஐந்தாவது வீரராக இணைவார். இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களை அடித்த வீரர்களாக சச்சின், சேவாக், டிராவிட், கவாஸ்கர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இதில் கோலி இந்த போட்டியிலேயே 42 ரன்கள் அடித்தால் அதிவேகமாக 4000 ரன்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார். ஏற்கனவே கவாஸ்கர் 87 இன்னிங்ஸ்களிலும், டிராவிட் 88 இன்னிங்ஸ்களிலும் இந்திய மண்ணில் 4000 டெஸ்ட் ரன்களை குவித்த வேளையில் தற்போது 76 இன்னிங்சில் விளையாட இருக்கும் கோலி முதல் இன்னிங்சிலேயே 42 ரன்கள் அடித்தால் இரண்டாவது இடத்தை பிடிப்பார்.
இதையும் படிங்க : வீடியோ : பாபர் அசாம் அணியை புரட்டி எடுத்த ஜேசன் ராய் மாஸ் சாதனை – பிஎஸ்எல் தொடரில் நிகழ்த்தப்பட்ட புதிய உலக சாதனை
அப்படி இல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் அடித்தால் சச்சின் டெண்டுல்கருடன் இரண்டாவது இடத்தை சமன் செய்து கொள்வார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த வீரராக சேவாக் 71 இன்னிங்சில் 4,000 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 7216 ரன்கள் உடன் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



